Advertisment

மாரி, கண்ட நாள் முதல், பொன்னி... ஜூன் மாதத்தில் படையெடுக்கும் புதிய சீரியல்கள்

Tamil Serial Update : ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக டிவி சேனல்கள் புதிய ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களை கொண்டு வந்துள்ளது.

author-image
WebDesk
Jun 08, 2022 21:02 IST
மாரி, கண்ட நாள் முதல், பொன்னி... ஜூன் மாதத்தில் படையெடுக்கும் புதிய சீரியல்கள்

Tamil Television New Serial Update In tamil : சின்னத்திரை என்பது மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானதாக மாறிவிட்டது. இதை தக்கவைத்தக்கொள்ளும் வகையில் டிவி சேனல்கள் அவ்வப்போது புதிய நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை களமிறங்கிய வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு கோடையை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக டிவி சேனல்கள் புதிய ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களை கொண்டு வந்துள்ளது.

Advertisment

மாரி

பிரபல கன்னட டிவி சீரியலான 'திரிநயனி'யின் ரீமேக்காக வரவிருக்கும் சீரியல் மாரி. ஏற்கனவெ தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. வரவிருக்கும் ஆபத்தை முன்பே தெரிந்துகொண்டு கடந்த காலத்தை பார்க்கும் மாரியின் தனித்துவமான திறனைப் பற்றிய நிகழ்ச்சி இது. மாரி தன் கணவனை ஆபத்தில் இருந்து எப்படி பாதுகாக்க பாடுபடுகிறாள் என்பது கதையின் மையக்கரு. இந்த சீரியலில் பிரபல நடிகை அபிதா 3 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

கண்ட நாள் முதல்

பிரபல தொலைக்காட்சி தொடரான இதயத்தை திருடாதே சமீபத்தில் முடிவடைந்த நிலையில், நடிகர் நவீன் குமார், 'கண்ட நாள் முதல்' என்ற மற்றொரு சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். குடியிருப்பில் வசிக்கும் நவீன அதே குடியிருப்பில் வசிக்கும் தகவல் தொழில்நுட்ப துறையை சார்த்த பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ளும் போலீஸ் கான்ஸ்டபிளாக நடிப்பதாகத் தெரிகிறது. இந்த சீரியல் ஜூன் 13 ஆம் தேதி முதல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

அமுதவும் அன்னலட்சுமியும்

கல்விக்காக ஏங்கும் அமுதா தனது தாயின் மறைவால் படிப்பை நிறுத்தியதன் குணாதிசயங்களை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது இந்த சீரியல். ஒரு ஆசிரியரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யும் அமுதா அதன் மூலம் தனது படிப்பைத் தொடரலாம் மற்றும் அவளுடைய கனவுகளை அடையலாம் என் எண்ணுகிறாள். தன் வாழ்க்கைக்கு ஏற்ற ஆசிரியரையும் துணையையும் அவள் கண்டுபிடித்தாளா என்பதே  இந்த கதையின் கருவாக உள்ளது.ஜூன் மாத இறுதியில் இந்த சீரியல் தொடங்க உள்ளது.

வெல்லும் திறமை

பிரபலமான ஹிந்தி ரியாலிட்டி ஷோவான 'ஹுனர்பாஸ்: தேஷ் கி ஷான்' இன் தமிழ் ரீமேக் தான் இந்த வெல்லும் திறமை நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் மாநிலம் முழுவதும் ஆடிஷன் நடத்தி போட்டியாளர்களைத் தேர்வு செய்தனர். நடுவர்களாக நடிகை நிக்கி கல்ராணி,  நடன இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் நடிகர் ஷிஹான் ஹுசைனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பொன்னி C/o வாணி

ராதிகா சரத்குமார் பொன்னி மற்றும் வாணியின் பால்ய நண்பர்கள் மற்றும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடிக்கிறார். வாணி நகரத்திற்குச் சென்று ஒரு புதிய வாழ்க்கையைக் வாழும் நிலையில், ​​பொன்னி கிராமத்தில் இருக்கிறாள். குடும்பத்தைப் பாதுகாக்க நண்பர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்தான் இந்த சீரியலின் முக்கிய கரு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Kalaignar Tv #Zee Tamil #Radhika Sarathkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment