Advertisment

சன்னி லியோனிடம் ஐ லவ் யூ சொன்ன ஜி.பி.முத்து... சன்னி என்ன பதில் சொன்னார்?

டிக்.டாக்.மூலம் அறிமுகமாகி ஊடகங்களின் துணையுடன் தற்போது திரைப்படங்களில் நடித்து வருவகிறேன். திரைத்துறையில் சிறந்த ஒத்துழைப்பு இருக்கிறது.

author-image
WebDesk
New Update
சன்னி லியோனிடம் ஐ லவ் யூ சொன்ன ஜி.பி.முத்து... சன்னி என்ன பதில் சொன்னார்?

பி.ரஹ்மான் கோவை

Advertisment

நடிகை சன்னி லியோனுடன் படம் நடித்தது சிறப்பான அனுபவம். அவர் தன்னை பார்த்து க்யூட் எனக் கூறிய போது சிலாகித்துப் போனேன் என டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ஜி.பி.முத்து செய்தியாளர்களளை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

டிக்.டாக்.மூலம் அறிமுகமாகி ஊடகங்களின் துணையுடன் தற்போது திரைப்படங்களில் நடித்து வருவகிறேன். திரைத்துறையில் சிறந்த ஒத்துழைப்பு இருக்கிறது. பிக் பாஸ் அனுபவம் சிறப்பாக இருந்தது. பிக் பாஸ் மூலம் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தது மிக பெரும் பாக்கியம். எனது குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் பிக் பாஸை விட்டு வெளியேறிவிட்டேன்.

publive-image

தற்போது ஐந்து திரைப்படங்களில் நடித்து வருகிறேன் நடிகை சன்னி லியோனுடன் திரைப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி. தான் அவரைப் பார்த்து ஐ.லவ்.யூ கூறியவுடன் அவர் தன்னை பார்த்து கியூட் என கூறிய போது சிலாகித்து போனேன். கோவையில் யூடியூபர் டிடிஎஃப் வாசன்  உடன் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றது இதுவரை தான் யாருடனும் அது போன்ற வேகத்தில் சென்றதில்லை. இந்த சம்பவத்திற்கு பிறகு இனிமேல் யாருடனும் செல்ல மாட்டேன் என தெரிவித்தார்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Gp Muthu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment