Advertisment

தப்பான பொருளை எடுத்தா கீழே வச்சிருங்க!' டிடி கூறும் வாழ்க்கை பாடம்

விஜய் டிவி சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட விஜய்டிவி விருது விழாவில் தொகுப்பாளினி டிடி உருக்கமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
தப்பான பொருளை எடுத்தா கீழே வச்சிருங்க!' டிடி கூறும் வாழ்க்கை பாடம்

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பிளினியான திவ்ய தர்ஷினி, விஜய் டிவி விருது விழாவில் பேசிய உருக்கமான பேச்சின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

தொலைக்கர்ட்சி தொகுப்பாளினிகளில் அதிகப்படியான ரசிகர்களை கொண்டுள்ளவர் திவ்ய தர்ஷினி. ரசிகர்கள் மற்றும் பிரபலங்களால் செல்லமாக டிடி என அழைக்கப்படும் இவர், திரைத்துறையில் ஏராளமாக நண்பர்களை வைத்துள்ளார். மேலும் ஒரு சில திரைப்படங்களில் நாயகியின் சகோதரி, நண்பர் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள இவர், தனுஷ் இயக்குநராக அறிமுகமான ப.பாண்டி படத்தில் முக்கிய  கதாப்பாத்திரத்தில் நடித்து அதிகப்படியான ரசிகர்களை பெற்றார்.

மேலும் கடந்த 2014-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைகாதல் திருமணம் செய்துகொண்ட அவர், சில மாதங்களிலேயே கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்த அவர், 2017-ம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றார். தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் டிடி, சமீப காலமாக நடிகைகளுக்கு இணையாக மார்டன் மற்றும் பிகினி உடைகளில் போட்டோ ஷூட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். டிடிவியின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வரும் நிலையில்,  டிடி இன்று வெளியிட்டுள்ள ஒரு வீடியோ ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற விஜய் டிவியின் விருது விழாவில், பேசிய டிடி தனது பேச்சு தொடர்பாக வீடியோ கிளிப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  அந்த வீடியோ பதிவில்,  கேர்ள்ஸோ பாய்ஸோ யாரோ, நீங்க தப்பான ஒரு பொருளை கையில எடுத்துட்டீங்கன்னா, அது தப்புன்னு தெரிஞ்சா யோசிக்காம அதை கீழ வச்சுடுங்க. அய்யோ நம்ம கீழ வைக்கலன்னா அவன் ஏதாவது சொல்லிடுவான், இவன் ஏதாவது சொல்லிடுவானோன்னு அதை கையிலேயே வச்சுருக்காதீங்க. அது உங்கள் வாழ்க்கையை எடுத்துடும். அவன் பேசிருவானோ இவன் பேசிருவானோன்னு பயந்து கீழ் வைக்காம இருக்கீங்கல்ல, நீங்க வச்சதுக்கு அப்புறம் எவனும் அதைப்பத்தி யோசிக்கக்கூட மாட்டான்.

ரெண்டு நாள்தான். தயவு செய்து தப்பான பொருள எடுத்திங்கன்னா தயவு செய்து வச்சுருங்க என உருக்கமாக பேசியுள்ளார். டிடியின் இந்த பேச்சுக்கு அரங்கத்தில் இருந்த சீரியல் பிரபலங்கள் பலரும் கண்கள் கலங்கி கைகளை தட்டி வரவேற்றனர். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment