சினிமா வாய்ப்புக்காக இப்படியொரு ஃபோட்டோஷூட் நடத்துன சீரியல் வில்லி…

Neelima Esai: பல சீரியல்களில் வில்லியாகவும், காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவும் நடித்து விட்டார், நடித்துக் கொண்டும் இருக்கிறார்.

Neelima Rani latest photo shoot
நீலிமா ராணி

Neelima Rani Latest Photo shoot: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சீரியல், சினிமா, ஆங்கரிங் என கலந்துக் கட்டி கலக்கிக் கொண்டிருக்கிறார் நடிகை நீலிமா ராணி.

Neelima Rani latest photo shoot
Neelima Rani latest photo shoot

தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா, தொடர்ந்து, பாண்டவர் பூமி, விரும்புகிறேன் ஆகியப் படங்களில் நடித்தார்.

Neelima Rani latest photo shoot
Neelima Rani latest photo shoot

பின்னர் தம், மொழி, திமிரு, நான் மகான், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களிலும், மேலும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

Neelima Rani latest photo shoot
Neelima Rani latest photo shoot

அதோடு பல சீரியல்களில் வில்லியாகவும், காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவும் நடித்து விட்டார், நடித்துக் கொண்டும் இருக்கிறார்.

Neelima Rani latest photo shoot
Neelima Rani latest photo shoot

தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும், “அரண்மனை கிளி” தொடரில் துர்கா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நீலிமா.

Neelima Rani latest photo shoot
Neelima Rani latest photo shoot

இருப்பினும் இவரது கலை தாகம் இன்னும் அடங்கவில்லை என்றே தோன்றுகிறது. நீலிமாவுக்கு பக்க பலமாய் இருப்பது, அவரது கணவர் இசை. தற்போது இவர்களின் குழந்தை கொஞ்சம் பெரியவளாகிவிட்ட காரணத்தினால், மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகிவிட்டார் நீலிமா.

Neelima Rani latest photo shoot
Neelima Rani latest photo shoot

அதனால் அவ்வப்போது வித விதமான காஸ்ட்யூம்களில் கலக்கலான ஃபோட்டோக்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் எடுத்துக் கொண்ட படங்களையும் பதிவேற்றியிருக்கிறார். இதுவரை நீலிமா பதிவிட்ட படங்களுடன் ஒப்பிட்டால், ஆனால் இதில் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாக இருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் ரசிகர்கள்.

Neelima Rani latest photo shoot
Neelima Rani latest photo shoot

சமூகவலைதளத்தின் அசுர வளர்ச்சியினால், சினிமா வாய்ப்புகளுக்காக விதவிதமான படங்களை வெளியிட்டு வரும் நடிகைகள் மத்தியில், நீலிமாவும் அந்த முயற்சியைக் கையாண்டிருக்கிறார் என்றே தெரிகிறது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil tv serial artist neelima esai photo shoot

Next Story
Verithanam: புதிய சாதனைப் படைத்த விஜய்யின் ’வெறித்தனம்’!Bigil censor details, thalapathy vijay
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com