Advertisment

ஒரு இடம் முன்னேறிய பாரதி கண்ணம்மா: டாப் 5 சீரியல்கள் இவைதான்!

கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா முதலிடம் பெற்ற பின் அடுத்தடுத்த வாரங்களில் இறங்கு முகம் கண்டது. இப்போது மீண்டும் ஏறுமுகம் கண்டு ஒரு இடம் முன்னேறியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil tv serials trp ratings, sunt tv roja top, vijay tv bharathi kannammma serial third place, சன் டிவி, ரோஜா சீரியல் டாப், விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல், பாரதி கண்ணம்மா 3வது இடம், பாரதி கண்ணம்மா, bharathi kannamma

கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் தமிழ் தொலைகாட்சி சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா முதலிடம் பெற்ற பின் அடுத்தடுத்த வாரங்களில் இறங்கு முகம் கண்டது. இப்போது மீண்டும் ஏறு முகத்துடன் ஒரு இடம் முன்னேறியுள்ளது.

Advertisment

தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால், அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட தொலைக்காட்சி என்ற டிஆர்பி ரேட்டிங்கில் மட்டும் சன் டிவி தொடர்ந்து முதலிடத்தையே தக்க வைத்து வருகிறது.

publive-image

அதே போல, தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்க்கிற பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்து டி.ஆர்.பி ரேட்டிங் மூலம் அகில இந்தியா ஒளிபரப்பு அசோசியேஷன் தரவரிசையை ஓவ்வொரு வாரமும் வெளியிட்டு வருகிறது. இதில் இந்த ஆண்டின் 16வது வாரம் ஏப்ரல் 17 முதல் 23ம் தேதி வரை சன் டிவிதான் தொடர்ந்து டாப் 5 இடங்களில் அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது.

தமிழ் டிவி சீரியல்களில் சன் டிவியின் ரோஜா சீரியல் தான் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இரண்டாம் இடத்தை சன் டிவியில் ஒளிபரப்பான பிச்சைக்காரன் படம் பெற்று உள்ளது.

publive-image

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அது நான்காவது இடத்தில் இருந்த நிலையில் பாரதி கண்ணம்மா ஒரு இடம் முன்னேறி 3வது இடத்தைப் பிடித்திருக்கிறது. எப்படி இருந்தாலும், பாரதி கண்ணம்மா தொடருக்கு பார்வையாளர்கள் குறைத்திருப்பதையே புள்ளிவிவரங்கள் காட்டுகிறது.

4வது மற்றும 5வது இடங்களை சன் டிவியின் வானத்தை போல மற்றும் பூவே உனக்காக ஆகிய சீரியல்கள் பிடித்துள்ளன. டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 நிகழ்ச்சிகளில் 4 இடங்களை சன் டிவி நிகழ்ச்சிகள் கைப்பற்றியுள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா முதலிடம் பெற்ற பின் அடுத்தடுத்த வாரங்களில் இறங்கு முகம் கண்டது. இப்போது மீண்டும் ஏறுமுகம் கண்டு ஒரு இடம் முன்னேறியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment