Advertisment

செப். 5 என சொன்னாரே..! நடிகர் புகழ் திடீர் திருமணம்; போட்டோஸ் வைரல்

வலிமை எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்த புகழ் சமீபத்தில் வெளியான அருண் விஜயின் யாணை படத்தில் காமெடியனாக யோகிபபபுவுடன் இணைந்து நடித்தார்.

author-image
WebDesk
New Update
செப். 5 என சொன்னாரே..! நடிகர் புகழ் திடீர் திருமணம்; போட்டோஸ் வைரல்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் புகழ் இன்று தனது காதலியை திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

ரியாலிட்டி ஷோக்கள் நடத்துவதில் முன்னணியில் இருந்து வரும் விஜய் டிவியின் மூலம் பல பிரபலங்கள் உருவாகியுள்ளனர். அந்த வழியில் வந்தவர்தான் புகழ். கடலூர் மாவட்டத்தில் இருந்து வேலை தேடி சென்னை வந்த இவர், தற்போது விஜய் டிவியின் முக்கிய ஸ்டார்களில் ஒருவராக உள்ளார். இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்த புகழ் தொடந்து படங்களில் வாய்ப்பு பெற்றார். இதில் சந்தானத்துடன் இவர் நடித்த சபாபதி படம் இவரது சினிமா வாழக்கையை முன்னெற்றியது. அதனைத் தொடர்ந்து வலிமை எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்த புகழ் சமீபத்தில் வெளியான அருண் விஜயின் யாணை படத்தில் காமெடியனாக யோகிபபபுவுடன் இணைந்து நடித்தார்.

தற்போது பல படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் புகழ் ஜூ கீப்பர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அதே சமயம் விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் புகழ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் பென்சி என்ற பெண்னை காதலித்து வருவதாகவும் விரைவில் தங்களது திருமணம் குறித்து அறிவிப்போம் என்றும் கூறியிருந்தார்.

publive-image

இதனால் புகழ் திருமணம் எப்போது என்று பலரும் கேட்க தொடங்கிய நிலையில், புகழ் பென்சியின் 5 வருட காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. இன்று நடைபெற்ற இந்த திருமணத்தில் உறவினர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில். திருமணம் தொடர்பான படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே திருமணம் தொடர்பான அழைப்பிதழில் செப்டம்பர் 5-ந் தேதி திருமணம் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், 1-ந் தேதியே திருமணம் முடிந்துவிட்டதால், வரும் 5-ந் தேதி வரவேற்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திருமணம் குறித்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment