Advertisment

ஷாக் நியூஸ்... விஜய் டிவியில் இந்த 2 முக்கிய சீரியல்களும் நிறுத்தம்?

Vijay TV Serial : கொரோனா ஊரடங்கு காரணமாக விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய சீரியல்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
ஷாக் நியூஸ்... விஜய் டிவியில் இந்த 2 முக்கிய  சீரியல்களும் நிறுத்தம்?

திரைப்பட்ங்களுக்கு இணையாக சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் சீரியல்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் மேலும் அதிகரித்து என்றே கூறலாம். ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால், சீரியல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பினாலும் ஒரு சில சீரியல்கள் ஒளிபரப்பு செய்யமால் நிறுத்தி வைக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது தீவிரமடைந்து வருவதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்து. இதனால் சீரியல் மற்றும் திரைபடங்களின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சீரியல்கள் ஒளிபரப்பு நேரம் மாற்றம். மற்றும் டைமிங் குறைப்பு என பல முயற்சிகளில் ஈடுபட்டு வந்த தொலைக்காட்சி சேனல்கள் தற்போது திணறி வருகின்றனர்.

இதில் கடந்த வாரம் திடீர் அறிவிப்பை வெளியிட்ட விஜய் டிவி இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே சீரியல் ஒளிபரப்பாகும் என்று கூறியது. இதனால் சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில். தற்போது மேலும் அதிர்ச்சி தரும் செய்தியாக ஹிட்டான இரண்டு சீரியல்கள் நேற்றுடன் நிறுத்தப்பட்டாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், தற்போது  பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 ஆகிய இரண்டு சீரியல்களும் நேற்றொடு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த சீரியல்கள் ஒளிபரப்பாகாது. கொரோனா தொற்று முடிந்து மீண்டும் சீரியல் படப்பிடிப்பு தொடங்கிய பிறகுதான் இந்த சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பை தொடங்கும் என தெரிகிறது. அதுவரை இரவில் ப்ரைம் டைமில் வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial Tamil Serial Update Raja Rani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment