Advertisment

மொத்தத்தில் ஜெயித்தது வாரிசு தான்: 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்

துணிவு வாரிசு என இரு படங்களுக்கும் பாசிட்டீவான விமர்சனங்களையே கிடைத்து வருகின்றன.

author-image
WebDesk
New Update
அப்போ 'இளைய தளபதி' பட்டமும் இன்னொரு நடிகரிடம் இரவல் வாங்கியதா?

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் (ஜனவரி 11) வெளியான நிலையில், இந்த படத்தின் பாக்ஸ்ஆபீஸ் வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழகத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜய் நடிப்பில் வாரிசு, அஜித் நடிப்பில் துணிவு ஆகிய படங்கள் வெளியானர். இரு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் கடந்த ஒரு மாத காலமாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், படம் வெளியான பின்பும் எந்த படம் அதிக கலெக்ஷன் செய்துள்ளது என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பொங்கல் தினத்தில் வெளியான துணிவு படம் வாரிசு  படத்தை வசூலை விட பின்தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அஜித்துடன் ஒப்பிடுகையில் விஜய் தான் பெரிய ஸ்டார் என்று வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், துணிவு படத்திற்கு போட்டியாக தமிழகத்தில் அதிக திரையரங்குகளைப் பெறுவதற்காக அவர் இவ்வாறு கூறியதாக தகவல் வெளியானது.

இதனிடையே தற்போது துணிவு வாரிசு என இரு படங்களும் வெளியாகிவிட்ட நிலையில், இரு படங்களுக்கும் பாசிட்டீவான விமர்சனங்களைளே கிடைத்து வரும் நிலையில்,இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க்கின் அறிவிப்பின் படி, வாரிசு படத்தின் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல், தற்போது ரூ. 46.2 கோடியாக உள்ளது. துணிவு படத்தின் பாக்ஸ் ஆபீஸ் ரூ. 37.6 கோடியாக உள்ளது.

தமிழகத்தில் வாரிசு படம் வெளியான இரண்டாவது நாளில் ரூ.16.2 கோடி வசூலித்துள்ளது. முதல் நாளில் ரூ.26.5 கோடி வசூலித்த இந்தப் படம், இந்தியாவில் இரண்டே நாளில் சுமார் ரூ.18-20 கோடி வசூலித்துள்ளது. இரண்டாவது நாளில், துணிவு மீண்டும் வாரிசு படத்திற்கு பின்னால் சுமார் 1 கோடி ரூபாய் குறைவாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு மற்றும் துணிவு இரண்டும் தமிழகத்தில் நீண்ட பொங்கல் வார விடுமுறையில் கலெக்ஷன்களை அள்ளி வருகிறது. இதில் துணிவு படம் இந்தியா முழுவதும் ஒரே நாளில் வெளியாகிவிட்ட நிலையில், வாரிசு படம் தெலுங்கு மாநிலங்களில் இதுவரை வெளியாகவில்லை. வாரிசு தெலுங்கில் தற்போது ஜனவரி 14 ஆம் தேதி (நாளை) வெளியாக உள்ளது. இதன் மூலம் வாரிசு படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில், வெளியாக வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும், பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயசுதா, குஷ்பு, யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது விமர்சனத்தில் 3 ஸ்டார்கள் வழங்கி பொதுவான மசாலா படம் என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் வாரிசு படம் ஸ்ரீமந்துடு, அல வைகுண்டபுரமுலோ, அத்தாரிண்டிகி தாரேடி உள்ளிட்ட பல படங்களின் கலவையாகும்.

'விஜய் மாஸ் தருணங்கள்', 'நான்கு சண்டைகள்', 'ஆடம்பரமான பாடல்கள்', 'மசாலா', 'அம்மா-மகன்'  செண்டிமெண்ட் என முக்கிய வார்த்தைகளால் அலங்கரிக்கப்படும் அளவுக்கான திரைக்கதையில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளி என்று குறிப்பிட்டிருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment