New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/09/priyanka.jpg)
சமீபத்தில் மலேசியா சென்றிருந்த சின்னத்திரை தொகுப்பாளினி பிரியங்காவுக்கு ரசிகர்கள் கொடுத்த பெரிய வரவேற்பு அவரை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
ரியாலிட்டி ஷோக்கள் நடத்துவதில் முன்னணியில் இருந்து வரும் விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா. முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கி வரும் பிரியங்காவின் பேச்சை கேட்கவே ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர் என்று சொல்லாம். மா.கா.பா.ஆனந்துடன் சேர்ந்து இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
கலகலப்பான பேச்சு, பாடல் நடனம், எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் தனது தனி முத்திரையை பதிப்பதில் பிரியங்கா வல்லவர். ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள பிரியங்கா கடந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்று 2-வது இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு நண்பர்கள் பலர் கிடைத்த நிலையில், அவ்வப்போது அவர்களுடன் வெளியூர் செல்வது அவுட்டிங் செல்வது என பிரியங்கா தனது சமூக வலைதளத்தை எப்போதும் பிஸியாக வைத்துள்ளார்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது விஜய் டிவி தொகுப்பாளர்கள் பட்டியலில் ஒரு வெற்றிடம் ஒருவானது. அதேபோல் பிக்பாஸ் சென்ற பிரியங்காவின் பெயரும் சற்று டெமேஜ் ஆகியிருந்தாலும் மீண்டும் தொகுப்பாளினியாக வந்து தனது பெயருக்கு வந்த கலங்கத்தை ரசிகர்கள் மனதில் இருந்து போக்கியவர். சமூக வலைதளம் மட்டுமல்லாமல் யூடியூப் சேனல் வைத்துள்ள பிரியங்கா அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. சமீபத்தில் மலேசியா சென்ற பிரியங்காவுக்கு ரசிகர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ பதிவை வெளியிட்டுள்ள பிரியங்கா, இவ்வளர் அன்பை நான் பார்த்ததே இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதே தவறு என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
இந்த நேரத்தில் இப்படி ஒரு அன்பு காட்டியது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. என்று கண்ணீருடன் கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.