Advertisment

ஈழத் தமிழருக்கு எதிராக சமந்தா குரல்... வெப் சீரிஸ் எதிர்ப்புக்கு என்ன காரணம்?

The Family Man season 2 : சமந்தா முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ள தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் இலங்கை தமிழர்கள் குறித்து தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
ஈழத் தமிழருக்கு எதிராக சமந்தா குரல்... வெப் சீரிஸ் எதிர்ப்புக்கு என்ன காரணம்?

தொழில்நுட்ப வளர்ச்சி அடுத்தகட்டத்திற்கு நகர்ந்து வரும் நஇந்த தருணத்தில் பொதுமக்களின் ரசனை திரைப்படங்களின் பக்கம் இருந்து வெப் சீரியஸ் பக்கம் திரும்பியுள்ளது. அதிலும் கொரோனா ஊரடங்கு காலத்தில்  தியேட்டர்கள் தடை செய்யப்பட்டதால் திரைப்படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றனர். இதனால் வெப் தொடருக்கும் திரைப்படங்களுக்கும் இடையே கடும் போட்டியே ஏற்பட்டுள்ளது. இந்தபோட்டியில் அதிகப்படியாக வெப் தொடரே வென்றுள்ளது. பல வெப் தொடர்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

Advertisment

அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற வெப் தொடர் தி ஃபேமிலி மேன். மனோஜ் பீஜாபாய், பிரியாமணி இணைந்து நடித்துள்ள இந்த வெப் தொடர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. உளவுத்துறையில் உயர் அதிகாரியாக இருக்கும் ஒருவர் வீட்டில் தனது மனைவியிடமும், வெளியில் உள்ள எதிரிகளையும் ஒரு சேர சமாளிக்கும் கதாப்பாத்திரத்தில் மனோஜ் திறமையான நடிப்பை வெளியிப்படுத்தியிருந்தார். அவருக்கு இணையாக கணவருக்கு தொல்லை கொடுக்கும் மனைவியாக பிரியாமணியும் சிறந்த நடிப்பை கொடுத்திருந்தார்.

பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த வெப் தொடர் இந்தி மட்டுமல்லாது தமிழ் தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு பெரும் ஹிட் அடித்தது. இதனால் இந்த வெப் தொடரின் 2-ம் பாகம் தயாராவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இந்த 2-ம் பாகத்தில் மனோஜ் பீஜாபாய், பிரியாமணி தவிர முக்கிய கதாப்பாத்திரத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான சமந்தா நடித்துள்ளார். இதனால் இந்த வெப் தொடருக்கு ஏகப்பட்ட எதிர்பார்பு நிலவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து 2-ம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில்,  வரும் ஜூன் 4-ம் தேதி இந்த தொடரில் 2-ம் பாகம் வெளியாகும் என்று அமேஸான் ப்ரைம் நிறுவனம்  அதிகாரப்பூர்வமாக அறிவித்த்து. அதனைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு இத்தொடரின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.  தற்போது இந்த டிரெய்லரே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரின் முதல்பாகம் முழுக்க மும்பையில் நடைபெறுவதாக கதைக்களம் அமைக்கப்பட்டிருந்த நிலையில், 2-ம் பாகம் முழு கதைகளம் முழுக்க சென்னையில் நடைபெறுதாக அமைக்கப்பட்டுள்ளத்தாக கூறப்படுகிறது.

அதனை உறுதிப்படுத்தும் விதமான இந்த டிரெய்லரில், உளவுப் பிரிவு அதிகாரி கதாபாத்திரத்தில் வரும் ஒருவர், ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கும் போராளிக்குழுவுக்கும் எதிர்பாராத வகையில் கூட்டணி ஏற்பட்டிருக்கிறது என்று ``நமக்குக் தகவல் கிடைத்துள்ளதாக கூறுகிறார். மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள சமந்தா ஈழத் தமிழ்ப் போராளிபோல விடுதலைப்புலிகளின் சீருடையைப்போல உடையனிந்துள்ளார். இதில் டிரெய்லரில், ``நான் எல்லாரையும் சாகக் கொல்லுவேன்'' என்று இலங்கைத் தமிழில் கூறுகிறார்.

இதன் மூலம் இந்த தொடர் இலங்கையில் நடைபெற்ற போரை தவறாக சித்தரிப்பதாகவும், தமிழ் போராளிகளை தீவிரவாதிகள் போன்று காட்ட நினைப்பதாகவும் சமூக வலைதளங்களில் எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது. இதனால் தமிழ் தேசியவாதிகள் மற்றும் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் பலரும் #FamilyMan2_against_Tamils என்கிற ஹேஷ்டேக்கை  உருவாக்கி ட்விட்டர் பக்கத்தில் தங்களது எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர். தற்போவரை இந்த ஹேஷ்டேக்கின் கீழ் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட ட்வீட்கள் பதிவாகியிருக்கின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment