பந்தகால் நடும் விழாவில் அபசகுணம்.. ரம்யாவால் அதிர்ச்சியான அப்பா
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் சேகர் அபிராமியிடம் வேலை கேட்டு கார்த்திக் வீட்டுக்கு வந்த நிலையில் இன்று, ரம்யா சேகரை மடக்கி பிடித்து எதுக்கு இங்க வந்த? இங்கிருந்து ஓடி போயிடு.. மாட்டிக்கிட்டா உனக்கும் பிரச்சனை, எனக்கும் பிரச்சனை என்று எச்சரிக்கிறாள். இந்த நேரத்தில் கார்த்திக் மாடியிலிருந்து கீழே இறங்கி வர சேகர் மறைந்து கொள்கிறான். அதன் பிறகு பந்தக்கால் நடுவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்க தொடங்குகிறது.
அடுத்ததாக அய்யர் மந்திரத்தை சொல்லி பந்தக்கால் நடுவதற்காக குழி எடுக்க சொன்னதும் சொந்தக்காரர்கள் குழி எடுக்க அதில் பூரான் ஒன்று இருப்பதை பார்த்து அபசகுணம் என்று அதிர்ச்சி அடைகின்றனர். யாரோ ஒருவர் இந்த கல்யாணத்துக்கு எதிராக செயல்படுவதாக சொல்கிறார். மேலும் இதற்கு ஒரு பரிகாரம் இருக்கு அதை செய்துவிடலாம் என்று ஐயர் சொல்கிறார். அதன் பிறகு பந்தக்கால் நட்டு முடிய கார்த்திக், தீபா என இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்கின்றனர்.
மறுபக்கம் ரம்யா வீட்டில் அவளது அப்பா எதையோ ஒன்றைத் தேட அப்போது ரம்யாவின் டைரி கையில் கிடைக்க அதைப் பிரித்து படிக்கும் போது அவள் கார்த்தியின் மீது காதலுடன் இருப்பதும் தீபாவை கொல்ல துடிப்பதும் தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சியாகும் அவளது அப்பா கார்த்திக்கு போன் போட்டு உடனடியாக உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நிச்சயதார்த்த மேடையில் நடுங்கிய கௌதம் கைகள்.. விலகி நின்ற மதுமிதா
நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் நேற்றைய எபிசோடில் மதுமிதா, கௌதம் நிச்சயத்திற்கு மோதிரம் எடுத்து தயாரான நிலையில் இன்று, நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் நடக்க இரண்டு குடும்பமும் கௌதம் வீட்டில் ஒன்று சேர்க்கின்றனர், அதன் பிறகு மதுமிதா கௌதமை மேடைக்கு ஏற்றுகின்றனர். இருவரும் அரைகுறை மனதுடன் நிச்சயதார்த்த மேடையில் ஏறுகின்றனர்.
அதன் பிறகு மாலை மாற்றி கொள்ள சொல்ல முதலில் மதுமிதா மாலை போட கௌதம் மாலை போட தயங்குகிறான், நடுக்கத்துடன் மாலை போடுகிறான், அதனை தொடர்ந்து இருவரும் மோதிரம் மாற்றி கொள்கின்றனர். இதையெல்லாம் அதிதி போட்டோ எடுத்து கொண்டிருக்க அவளது மாமா உனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கா என்று கேட்க இல்லை அக்காவுக்கு இது சரியான வாழ்க்கை தான் என்று சொல்கிறாள்.
அடுத்து போட்டோ எடுக்க போட்டோகிராபர் இருவரை நெருங்கி நிற்க சொல்கிறார். ஆனால் இருவரும் நெருக்கம் காட்ட தயங்கி கொண்டு தள்ளி நிற்கின்றனர், சந்தோஷ் மற்றும் அவனது மனைவி கௌதமை தள்ளி நிற்க சொல்லியும் அவன் கேட்காத நிலையில் அவனை பிடித்து தள்ளி விட அவன் மதுமிதா மீது மோதி கொள்ள இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“