Advertisment

ரசிகர்களிடம் கோபமான நடிகர் அஜித் : வாக்குச்சாவடியில் நிகழ்ந்த பரபரப்பு

வாக்குச்சாவடியில் செல்பி எடுக்க முயன்ற ரசிகர்களிடம் நடிகர் அஜித் கோபமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
அஜித் மீது குற்றம் சுமத்தும் பெண் ஊழியர்; உண்மை என்ன?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித், ரசிகர்கள் ஒருவர் செல்பி எடுக்க முயன்றபோது ஒருவரின் செல்போனை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ள இந்த தேர்தலில் 3998 வேட்பாளர்கள் போட்டியிடுகினறனர். மேலும் கன்னியாகுமரியில் நடைபெறும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், வாக்குச்சாவடிகளில் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், ஒரு சில தொகுதியில் வாக்கு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமானது. ஆனாலும் சென்னையில் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் காலை முதலே தங்களது வாக்குகளை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கும் முன்னரே (காலை 6.30) திருவான்மையூர் வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் வந்த நடிகர் அஜித்குமார் வாக்குப்பதிவுக்காக காத்திருந்தார். அஜித் காத்திருப்பதால்7 மணிக்குமன்னதாகவே வாக்குப்பதிவு தொடங்கிய தேர்தல் அலுவலர்கள், அஜித்தை முதல் ஆளாகா வாக்களிக்க வைத்தனர். ஆனால் அஜித் வாக்களிக்க வந்த செய்தி பரவியதை தொடர்ந்து ரசிகர்கள் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டனர். காவல்துறை வர தாமதமானதால், ரசிகர்கள் பலரும் அஜித்துடன் செல்பி எடுக்க முயன்றனர்.

இதனால் ரசிகர்களை பார்த்த அஜித் கோபமாக முறைத்ததால், செல்பி எடுக்க வந்த சிலர்  பின்வாங்கினர். ஆனால் மற்றொருபுறம், இன்னொரு ரசிகர்கள் செல்பி எடுக்க முயன்றார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அஜித் அந்த ரசிகரின் செல்போனை பறித்துவிட்டார். அதன்பிறகு காவல்துறையினர் ரசிகர்களை அப்புறப்படுத்தினர். மேலும் அஜித் ரசிகர்களை பார்த்து வெளியேறும்படி கையசைத்தார். அதன்பின் ரசிகர்கள் வெளியேறிய நிலையில், அஜித் தனது வாக்கை பதிவு செய்தார். இதனால் திருவான்மையூர் வாக்குச்சாவடியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Assembly Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment