Advertisment

சென்னை தியேட்டர்களில் விதியை மீறி 6 காட்சிகள் ரிலீஸ்? பீஸ்ட் படத்திற்கு எதிராக பரபரப்பு புகார்

Tamil Cinema Update : சென்னையில் உள்ள திரையரங்கு நிர்வாகம் / உரிமையாளர்கள் தங்களின் திரையரங்குக்கு வரும் நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்து உள்ளார்கள்

author-image
WebDesk
New Update
சென்னை தியேட்டர்களில் விதியை மீறி 6 காட்சிகள் ரிலீஸ்? பீஸ்ட் படத்திற்கு எதிராக பரபரப்பு புகார்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் பீஸ்ட். டாக்டர் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஷா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். மேலும் இயக்குநர் செல்வராகவன் முக்கிய வேடத்திலும், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லே காமெடி வேடத்திலும் நடித்து்ளளனர்.

Advertisment

சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து வெளியாக அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா என்ற 2 பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வரும் 13-ந் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. இதற்கான டிரெய்லர் கடந்த 02-ந் தேதி வெளியிடப்பட்டது

ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீஸ்ட் படம் திரையிடப்படும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், அனுமதி பெறாமல் நல்லிரவு கட்சிகள் திரையிடப்பட உள்ளதாகவும் கூறி இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி  தேவராஜன் என்ற சமுக ஆர்வலர் சென்னை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில்,

சென்னையில் உள்ள திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூல் மற்றும் வீதி மீறிய 6 காட்சிகள் திரைப்படத்தை வெளியீடு என அனைத்து வகையிலும் நேர்மையற்ற வணிகம் செய்து வரும் திரையரங்கு நிர்வாகம் மற்றும் உரிமையாளர்கள் வரும்  13.04.2022 அன்று வெளியாகும் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரும் Beast ”பீஸ்ட்” திரைப்படத்தை திரையீட இருக்கின்றார்கள்.

சென்னையில் தங்களின் அளுமைக்கு கீழ் உள்ள அணைத்து திரையரங்குகளிலும், 6 காட்சிகள் 13.04.2022 அன்று வெளியீட உள்ளார்கள். இது அரசாணை எண். 2907 தேதி 03.11.1980-க்கு எதிரானதாகும்.

publive-image

Govt Letter (ms) NO.331 Home cinema Department dated 01.04.2016 சினிமா திரையரங்குகளை கண்காணித்திட குழு அமைக்க அரசு உத்தரவு படி Rc.No.E4(2)/05/4687/2016 Dated : 10.01.2017-ன் படி அமைக்கப்பெற்ற குழுவைக்கொண்டு தங்களின் அளுமைக்கு கீழ் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் அரசாணை எண். GO Ms No 762 DATED 16.10.2017  நிர்ணயம் செய்த கட்டணம் வசூல் செய்யப்படுகின்றதா என்று ஆய்வு செய்ய வேண்டும்..

மேலும், GO Ms No 891 DATED 30.11.2017-ன் படி  Two Wheeler / CAR PARKING  கட்டணம் வசூல் செய்யப்படுகின்றதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.

அதே நேரத்தில் GO Ms No 2907 DATED 03.11.1980  -ன் படி 4 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் ஆனால், விதியை மீறி Beast ”பீஸ்ட்” திரைப்படத்தை கூடுதல் காட்சிகளை திரையங்குகள் வெளியிடுவதை தடுக்க வேண்டும்.

publive-image

சென்னையில் உள்ள திரையரங்கு நிர்வாகம் / உரிமையாளர்கள்  தங்களின் திரையரங்குக்கு வரும் நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்து உள்ளார்கள். புதிய திரைப்படம் வெளியீடும் போது 1000 கோடி ரூபாய் கொள்ளையடித்து இருக்கின்றார்கள். மேலும், அரசு அனுமதி பெறாமல் நள்ளிரவு காட்சிகள் மற்றும் 6 காட்சிகளையும் திரையிட உள்ளார்கள்.

publive-image

திரையரங்குகளில் கூடுதலாக வசூல் செய்த கட்டணத்தை திருப்பி தர உத்தரவு பிறப்பிக்க வேண்டும்

publive-image

ஐயா / அம்மா அவர்களே, என்னுடைய மனு மீது உரிய விசாரணை செய்து தங்களின் அளுமைக்கு கீழ் உள்ள திரையரங்கு நிர்வாகத்தினார்கள் Beast ”பீஸ்ட்” திரைப்படத்தை அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் மற்றும் வரி வகையாராக்கல் ஏய்பு/மோசடி மற்றும் அனுமதியின்றி 6  காட்சிகள் திரையீடுவது மற்றும் இரு சக்கரம் / நான்கு சக்கர வானங்களுக்கு நிர்ணயம் செய்த கட்டணம் வசூல் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு படி இலவச குடிநீர் வசதிகள் உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மேற்சொன்ன அரசாணைகளை மீறி செயல்பாடும்  திரையரங்கு மீது சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடுதலாக வசூல் செய்த கட்டணத்தை திருப்பி தர உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பணிந்து கேட்டுக்கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment