Advertisment

Tamilrockers : தமிழ்ராக்கர்ஸ் அட்மின் கைது? கோவையில் நடந்தது என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil movie 2019, tamil movie 2019 download tamilrockers, தமிழ் மூவி, தமிழ் ராக்கர்ஸ், tamilrockers 2019 movies download

tamil movie 2019, tamil movie 2019 download tamilrockers, தமிழ் மூவி, தமிழ் ராக்கர்ஸ், tamilrockers 2019 movies download

Tamilrockers Admin Arrested in Coimbatore : பிரபல தமிழ்ராக்கர்ஸ் இணையத்தின் அட்மின்களில் ஒருவரை போலீசார் கோவையில் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

கோலிவுட் சினிமா உலகிற்கு மிக பெரிய பிரச்சனையாக இருப்பது தமிழ்ராக்கர்ஸ். புதிதாக வெளியாகும் திரைப்படங்களை முறைக்கேடாக இணையத்தில் வெளியிட்டு பலரின் உழைப்பையும் வீணாக்கி வருகிறது தமிழ் ராக்கர்ஸ். இத்தகைய இன்னல்களை ஏற்படுத்தும் இந்த இணையத்தளத்தின் அட்மின்களை பிடிக்க காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி வெளியான 2.0 திரைப்படத்தை ரிலீசான அதே நாளிலேயே தனது இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டது இந்த தமிழ்ராக்கர்ஸ். இந்த சம்பவம் நடக்காமல் இருக்க 3000 இணையத்தளங்களுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. எனினும் இப்படத்தை அவர்கள் லீக் செய்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.

Tamilrockers Admin Member Arrested : தமிழ்ராக்கர்ஸ் அட்மின் கைது

இத்தகைய பிரச்சனைகள் முதலில் தமிழ் திரையுலகிற்கே இருந்தது. ஆனால் இப்போது தெலுங்கு போன்ற பிற மொழி படங்களையும் வெளியான சில நேரத்திலேயே அவர்கள் லீக் செய்து வருவதால் ஒட்டுமொத்த சினிமா உலகமும் பயங்கர டென்ஷனில் உள்ளது.

இந்நிலையில், கோவையில் நேற்று தமிழ்ராக்கர்ஸ் அட்மின்களில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இருப்பினும் அந்த நபர் பற்றிய விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவிலேயே அந்த நபர் தமிழ்ராக்கர்ஸ் அட்மினா என்ற விவரங்கள் வெளிவரும்.

Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment