விஜயின் சர்கார் கதிதான் 2.0-க்கும்! சூப்பர் ஸ்டாரையும் மிரட்டும் தமிழ் ராக்கர்ஸ்

Tamilrockers vs Sarkar என இருந்த மோதல், அடுத்து Tamilrockers vs 2.o என மாறும் போலத் தெரிகிறது.

After Sarkar, TamilRockers Threats 2.0: சர்கார் படத்தைப் போலவே 2.0 படத்தையும் திருட்டுத்தனமாக வெளியிடுவதாக மிரட்டியிருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்! சூப்பர் ஸ்டார் படத்தையும் விட்டுவைக்க தவறவில்லை தமிழ் ராக்கர்ஸ்!

ஆயிரக்கணக்கானோரின் உழைப்பை, கனவை சர்வ சாதாரணமாக சிதைத்து வரும் தமிழ் ராக்கர்ஸ், கடந்த தீபாவளியன்று வெளியான விஜய்யின் சர்கார் படத்தை ஹெச்.டி. தரத்தில் ரிலீஸ் செய்வோம் என்று அப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே சவால் விட்டது.

முன்னதாக நீதிமன்றம் சென்று, இணையத்தில் சர்கார் படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் தடை வாங்கியது. ஆனால், இந்தியாவில் சர்கார் ரிலீஸ் ஆன அதே நாளன்று, தனது தளத்திலும் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ். இதன் மூலம், யாருக்கும் அடிபணியப்போவதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிலை நாட்டியது.

Tamilrockers Leaked Sarkar… Next Threat To 2.0: சூப்பர் ஸ்டார் படத்திற்கு அடுத்த மிரட்டல்:

இந்த விவகாரம் ஒருபுறமிருக்க, இம்மாதம் 29ம் தேதி வெளியாகவுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படமும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் வெளியிடப்படும் என அதன் ட்விட்டர் என்று அறியப்படும் பக்கத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், “#2Point0 Coming Soon in Tamil Rockers’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்து லைக்கா நிறுவனம் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடுவோம் என்று கூறியிருப்பது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், என்னதான் தமிழ் ராக்கர்ஸ் படங்களை இப்படி திருட்டுத் தனமாக வெளியிட்டாலும், நல்ல படமாக இருந்தால், ரசிகர்கள் அதனை தியேட்டரில் வந்து பார்ப்பதை யாராலும் தடுக்க முடியாது என்பதே நிதர்சன உண்மை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close