Advertisment

2.0 Movie in Tamilrockers: ரஜினிகாந்த் - ஷங்கர் - லைகா கூட்டணியையும் அதிர வைத்த தமிழ் ராக்கர்ஸ்

Rajinikanth's 2.0 full movie online: தமிழ் ராக்கர்ஸுக்கு மூக்கணாங்கயிறு போடப்படும் எனப் பார்த்தால் சத்தமில்லாமல் படத்தை வெளியிட்டு எக்காளச் சிரிப்பு சிரிக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
2.0 Movie in Tamilrockers :

2.0 Movie in Tamilrockers :

2.0 Full Movie Download: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான 2.0 படத்தை சட்ட விரோதமாக தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்தது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த், ஷங்கர், லைகா என பிரமாண்ட பேனர்கள் இணைந்த படத்திலாவது தமிழ் ராக்கர்ஸுக்கு மூக்கணாங்கயிறு போடப்படும் எனப் பார்த்தால் சத்தமில்லாமல் படத்தை வெளியிட்டு எக்காளச் சிரிப்பு சிரிக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

Advertisment

சுமார் 500 கோடிக்கும் மேல் செலவில் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. பிரமாண்டமாக அதிக பொருட் செலவில் உருவாகியிருக்கும் இப்படத்தை இணையத்தில் லீக் செய்வதை தடுக்கும் வேண்டும் என்று லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

Rajinikanth's 2.0 Full Movie in Tamilrockers : 2.0 படத்தை லீக் செய்தது தமிழ் ராக்கர்ஸ்

அந்த மனுவில், மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள 2.0 படத்தை முறைகேடாக 12 ஆயிரத்து 567 இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 2.0 படத்தை முறைக்கேடாக வெளியிடுவதற்கு தடை விதித்தது.

2.0 Movie in Tamilrockers, Rajinikanth-Akshaykumat Hit film in online HD Print, 2.O Full Movie In TamilRockers: ரஜினிகாந்த் படத்திற்கும் இந்தக் கதியா?

ஆனால் இந்த தடையையும் மீறி சட்ட விரோதமாக இன்ரு வெளியான 2.0 படத்தை இணையத்தில் வெளியிட்டது தமிழ்ராக்கர்ஸ். இதனை பார்த்த படக்குழுவினர் அதிர்ச்சியில் உரைந்தனர். 2.0 படத்திற்காக 4 வருடங்கள் உழைத்த பலரின் உழைப்பிலும் மண்ணை அள்ளி போட்டது தமிழ்ராக்கர்ஸ்.

தமிழ் ராக்கர்ஸை தடுக்க திரையுலகம் நெடிய போராட்டத்தை நடத்தி வருகிறது. இதுவரை அதற்கு பலன் கிடைக்கவில்லை. ரஜினிகாந்த், ஷங்கர், லைகா என பிரமாண்ட பேனர்கள் இணைந்த படத்திலாவது தமிழ் ராக்கர்ஸுக்கு மூக்கணாங்கயிறு போடப்படும் எனப் பார்த்தால் சத்தமில்லாமல் படத்தை வெளியிட்டு எக்காளச் சிரிப்பு சிரிக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

இதை அடக்கவும் ஸ்பெஷலாக ஒரு ‘சிட்டி’யை உருவாக்க வேண்டியிருக்குமோ?

Tamil Cinema Rajinikanth Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment