Advertisment

அட, இவரா? பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்ட்ரி ஆகும் பிரபல நடிகர்!

Tamil Serial Update : தற்போது மீண்டும் மகிழ்ச்சியின் பாதைக்கு சென்றுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கர்ப்பமாக இருந்த தனத்திற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

author-image
WebDesk
New Update
அட, இவரா? பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்ட்ரி ஆகும் பிரபல நடிகர்!

Pandian Stores Serial New Update : சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய்டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், குடும்ப ஒற்றுமை, சகோதர பாசம் ஆகிய முக்கிய தேவைகளை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

வழக்கமாக மகிழ்ச்சியின் பாதையில் சென்றுகொண்டிருந்த இந்த சீரியலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸின் முக்கிய கதாப்பாத்திரம் லக்ஷ்மி அம்மா இறந்துவிடுவது போல் கதை அமைக்கப்பட்டது. இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், கடைக்குட்டி கண்ணன் ரீல் அம்மாவுக்காக ரியலாக மொட்டை அடித்துக்கொண்ட சம்பவம் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது.

தற்போது மீண்டும் மகிழ்ச்சியின் பாதைக்கு சென்றுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கர்ப்பமாக இருந்த தனத்திற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான நிகழ்வை குடும்பத்தில் அனைவரும் கொண்டாடி வரும் நிலையில்,ஒருபுறம் மீனா தனது குழந்தையை யாரும் கண்டுகொள்ளவில்லையே என்று ஆதங்கப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் கதிர் முல்லை இருவருக்குள்ளும் ரொமான்ஸ் காட்சி அரங்கேறி வருகிறது.

இதனால் சீரியலில் அடுத்து என்ன திருப்பம் அரங்கேறும் என்று யூகிக்க முடியாத நிலையில், மூர்த்தி தனம் தம்பதி விரைவில் மகனின் பெயர் சூட்டும் விழா நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்பெஷல் நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ் கலந்துகொள்ள இருக்கிறார், அவர் சீரியல் செட்டில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update Pandian Stores
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment