Advertisment

விக்னேஷ் சிவன் லக்கி இல்லை... சீரியல் நடிகை ஸ்ரீநிதி கருத்து

சீரியல் நடிகை ஸ்ரீநிதி விக்கி நயன் ஜோடி குறித்து கூறியுள்ள கருத்து வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
விக்னேஷ் சிவன் லக்கி இல்லை... சீரியல் நடிகை ஸ்ரீநிதி கருத்து

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களின் திருமணம் தொடர்பாக சீரியல் நடிகை ஸ்ரீநிதி கூறியுள்ள கருத்து இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

வின்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் நாயகியாக நடித்த நயன்தாரா அவருடன் காதல் ஏற்படத்தை தொடர்ந்து 7 வருடங்களாக காதலித்த இவர்கள் கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர். மாமல்லபுரத்தில் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரையுலகை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இதனிடையே சீரியல் நடிகை ஸ்ரீநிதி விக்கி நயன் ஜோடி குறித்து கூறியுள்ள கருத்து வைரலாகி வருகிறது. சமீப காலமாக சர்ச்சையில் சிக்கி வரும் ஸ்ரீநிதி வலிமை படத்தை குறித்து பேசி அஜித் ரசிகர்களிடம் சிக்கிக்கொண்டார். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ள ஸ்ரீநிதி ஜீ தமிழின் யாரடி நீ மோகினி தொடரின் மூலம் பிரபலமானார்

அதன்பிறகு ஒரு சில சீரியல்களில் நடித்து வந்த ஸ்ரீநிதி, வலிமை குறித்து சர்ச்சை, மற்றும் நடிகர் சிம்புவை திருமணம் செய்துகொள்ள ஆசை என கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். மேலும் சிம்பு வீட்டிற்கே சென்று திருமணம் செய்துகொள் சொல்லி ரகளையில் ஈடுபட்டது சமூக வலைதளங்கில் வைரலாக பரவியது.

இதனிடையே ஸ்ரீநிதி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நயன்தாரா அக்காவை எனக்கு ரொம்ப பிடிக்கும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் விக்னேஷ் சிவன் லக்கி கிடையாது. தமிழ் பையன் நயனுக்கு கிடைத்திருக்கிறார். நல்லா பார்த்துப்பார். அதனால் நயன்தாரா லக்கி என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment