காலா வில்லன் நானா படேகர் மீது பிரபல நடிகை வைத்த குற்றச்சாட்டு!

Tanushree Dutta Accuses Nana Patekar for Harassing Her on Set 10 Years Ago: பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பிரபல பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா கடுமையாக புகார் அளித்துள்ளார். இருவரும் தமிழிலும் சில படங்கள் நடித்துள்ளனர்.

Tanushree Dutta Accuses Nana Patekar : நானா படேகர் மீது பிரபல நடிகை குற்றச்சாட்டு :

பாலிவு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் மற்றும் இயக்குநர் நானா படேகர். இவர் இயக்கியிருக்கும் பெரும்பாலான படங்களில் இவரே நடித்திருக்கிறார். அதே போல், பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தாவும் பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இவ்வாறு, 2008ம் ஆண்டு பாலிவுட்டில் ஹிந்தி படத்திற்காக நடித்திருந்தபோது நானா படேகர் அவரை தாக்கியதாக குற்றம்சாட்டுகிறார். மேலும் அவர் பல நடிகைகளை வன்முறையுடனே கையாண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

பின்னர் இப்படிபட்ட நடிகர்களுடன் பெரிய நடிகர்கள் நடிக்க வேண்டாம் என்று நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் ரஜினிகாந்திடமும் கேட்டுகொண்டதாகவும். இந்த விவகாரத்தை நானா படேகருடன் நடிக்கும் ஒவ்வொருவரும் முக்கியமாக கருத வேண்டும் என்றும் தனியார் தொலைகாட்சி பேட்டியில் கூறியிருக்கிறார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close