Advertisment

Tamilrockers : தடம் படத்தை லீக் செய்த தமிழ்ராக்கர்ஸ்... அதிர்ச்சியில் படக்குழு

Tamilrockers Leaked Arun Vijay Starrer Thadam Movie Online: அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தை இணையத்தில் முறைகேடாக லீக் செய்தது தமிழ்ராக்கர்ஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilrockers : தடம் படத்தை லீக் செய்த தமிழ்ராக்கர்ஸ்... அதிர்ச்சியில் படக்குழு

Thadam Movie in Tamilrockers

Tamilrockers Leaked Thadam Movile Online for Free Download: மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கும் தடம் படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது.

Advertisment

மணிரத்தினம் இயக்கத்தை தொடர்ந்து அருண் விஜய் நடித்திருக்கும் படம் தான் தடம். இந்த படத்தில் அவருடன் இணைந்து தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், சோனியா அகர்வால் மற்றும் வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அருண் ராஜ் இசையமைத்திருக்கிறார்.

Thadam Movie in Tamilrockers: தடம் படம் லீக்

எழில் மற்றும் கவின் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருண் விஜய், தனது நடிப்பால் மீண்டும் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார். நேற்று வெளியான 4 திரைப்படங்களில் இந்த படத்திற்கே ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Thadam Movie in Tamilrockers

வார இறுதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல் ஆனது. இத்தகைய படத்தை தமிழ்ராக்கர்ஸ் நேற்று இணையத்தளத்தில் லீக் செய்தது. இதனால் படக்குழுவினர் வருத்தத்தில் உள்ளனர்.

Thadam Public Review : தடம் பதித்த தடம்... அருண் விஜய்யை தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்

கடந்த சில ஆண்டுகளாகவே படம் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர்களின் உழைப்பில் மண்ணை வாரிப் போடுகிறது தமிழ்ராக்கர்ஸ். இவர்களின் இந்த முறைகேடான செயலை உடனே தடுத்த நிறுத்த வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரை அடுத்து அந்த பக்கத்தில் அட்மினை கைது செய்ய போலீசார் முயற்சித்து வருகின்றனர். ஆனால் இன்று வரை அவர்களின் முயற்சி தோல்வியிலேயே முடிந்து வருகிறது.

Tamil Cinema Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment