ஜெயலலிதாவின் அன்பை பெற்ற அஜித் : எப்படி இது சாத்தியம்?

அவர் நடித்த படங்கள் பற்றி வரிசையாக லிஸ்ட் போட்டு சொல்ல ஜெ.வின் ஞாபகத் திறன் கண்டு திகைத்து போனார் அஜித்.

Happy Birthday Ajith, Ajith jayalalithaa bonding
Happy Birthday Ajith, Ajith jayalalithaa bonding

Ajith, Jayalalithaa: நடிகர் அஜித்துக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே சுமூகமான அன்பு இருந்திருக்கிறது. உடல் நலக்குறைவால் ஜெயலலிதா இறந்தபோது, ‘விவேகம்’ படப்பிடிப்பில் இருந்தார் அஜித். ஷூட்டிங் முடிந்த பின் அஜித் நேரடியாக மெரினாவில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடத்தில் குடும்பத்தோடு அஞ்சலி செலுத்தினார். அந்த அளவிற்கு அஜித் ஜெயலலிதா மீது மரியாதை வைத்து இருந்தார்.

தொடர் தோல்விகள், துவண்டு போகவில்லை: ஃபீனிக்ஸ் பறவையாக எழுந்த அஜித்!

அஜித்தை பலமுறை, ஜெயலலிதா பாராட்டி இருக்கிறார். ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை அஜித்துக்கு வழங்கினார் ஜெயலலிதா. அதன்பின் ஒருநாள் அஜித் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் சந்தித்தார். அப்போது அஜித் அதிமுக-வில் சேரப் போகிறார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் போக போக அவர் அரசியல் பக்கம் செல்லாமல், விளையாட்டு, சினிமா, குடும்பம் என்று இருந்துவிட்டார்.

அஜித்துக்கும் ஜெயலலிதாவுக்குமான நெருக்கம் எப்படி உண்டானது தெரியுமா? தனது திருமணத்துக்கான அழைப்பிதழை சினிமா உலக விஐபிகளுக்கு தானே சென்று வழங்கி வந்தார் அஜித். அப்போது ஒருவர் ”ஜெயலலிதா மேடத்துக்கு இன்விடேஷன் கொடுத்தால் நல்லா இருக்கும்” என்று சொல்ல உடனடியாக போயஸ் கார்டனை தொடர்பு கொண்டு அப்பாய்ன்மென்ட் கேட்க, அதற்கு அனுமதியும் கிடைத்தது. அப்போது அஜித் வளர்ந்து வளரும் நடிகர். அந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவை சந்தித்து கல்யாண அழைப்பிதழை கொடுத்தார். அப்போது அஜித்திடம் அன்பாக பேசிய ஜெயலலிதா, அவர் நடித்த படங்கள் பற்றி வரிசையாக லிஸ்ட் போட்டு சொல்ல ஜெ.வின் ஞாபகத் திறன் கண்டு திகைத்து போனார் அஜித். அதன் பின் கன்னிமாரவில் நடந்த அஜித் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தார் ஜெயலலிதா.

வழக்கமாக ஜெயலலிதாவை கண்டால் எல்லோரும் கரம் கூப்பி வணங்குவது வழக்கம். ஜெயலலிதா மேடையில் ஏறி அஜித்துக்கு வாழ்த்து சொல்ல அருகில் வந்த போது தீடீரென்று அஜித் கை கொடுப்பதற்காக கையை நீட்ட திகைத்துப் போன ஜெ, பின்னர் சிரித்துகொண்டே கை கொடுத்து வாழ்த்து சொன்னார்.

லாக்டவுனில் எங்கே இருக்கிறார் டிடிவி? வைரலாகும் முறுக்கு ”மீசை தினகரன்” புகைப்படங்கள்!

அப்போது இருந்தே சினிமா நடிகர்களிலேயே அஜித் மீது தனி அன்பு செலுத்தி வந்தார் ஜெயலலிதா. இது அஜித்திற்கும் நன்றாகவே தெரியும். ஜெயலலிதாவுக்கு அஜித் மேல் இருந்த அன்புக்கு இன்னொரு உதாரணம் உண்டு. 2011-ல் அதிமுக ஆட்சி அமைந்த போது, திமுக சார்ந்த நிறுவனங்கள் தயாரித்த படங்கள் கெடுபிடிகளை சந்தித்த போது. தயாநிதி அழகிரி தயாரித்த, அஜித்தின் ‘மங்காத்தா’ மட்டும் சுமூகமாக வெளிவந்தது.

குறிப்பாக ஜெயலலிதாவுக்கு பதவி ஆசை இல்லாதவர்களை ரொம்பவே பிடிக்கும். எத்தனையோ கால கட்டங்களில் அஜித்தை அதிமுக-வுடன் இணைத்து பல செய்திகள் வெளிவந்தன. குறிப்பாக ஜெயலலிதா மறைந்த சமயத்தில், இனி அதிமுக அஜித்தின் கைக்கு செல்லப் போகிறது என்ற செய்தி தீவிரமானது. ஆனால் எதையும் அஜித் கண்டுக் கொள்ளவில்லை. முக்கியமாக தனது ரசிகர் மன்றத்தை கலைத்த, அஜித்தின் அந்த தைரியம் ஜெயலலிதாவை ரொம்பவே இம்ப்ரெஸ் செய்தது!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thala ajith aiadmk former chief jayalalithaa bonding

Next Story
1 வெற்றி 4 தோல்வி: தன்னம்பிக்கையை இழக்காத அஜித்!Happy Birthday Thala Ajith
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express