Advertisment

அஜித்தின் அடுத்தப்படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் போனி கபூர்!

AK60: அஜித் குமார் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை ஜீ ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரிக்கிறேன். இதற்கான பூஜை ஆகஸ்ட் இறுதியில் போடப்படும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ner Konda Paarvai, thala ajith, thala 60

Tamil Nadu news today in tamil,

Thala 60: இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றியை சுவைத்த நடிகர் அஜித், தற்போது இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் ‘நேர்க்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இதனை  தயாரித்திருக்கிறார். இந்தப் படம் அமிதாப் பச்சன் மற்றும் டாப்ஸியின் நடிப்பில் இந்தியில் வெளியான ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக் என்பது நாம் முன்பே அறிந்தது தான்.

Advertisment

’நேர்க்கொண்ட பார்வை’ படம் வெளியான பிறகு, அஜித் போனி கபூர், ஹெச்.வினோத் கூட்டணி மீண்டும் இணையும் செய்தியையும் முன்பே உறுதிப்படுத்தினார் போனி கபூர். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் இறுதியில் தொடங்குகிறதாம். இது குறித்து போனிகபூர், "ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகும் நேர்க்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய குழுவினருக்கு மிக்க நன்றி. எங்களது அடுத்தப் படமான AK60-ஐ அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அஜித் குமார் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை ஜீ ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரிக்கிறேன். இதற்கான பூஜை ஆகஸ்ட் இறுதியில் போடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

நேர்க்கொண்ட பார்வை படத்தில் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி மற்றும் ஆண்ட்ரியா நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்திருக்கிறார். பெண்களின் நீதிக்காகப் போராடும் வழக்கறிஞராக அஜித் நடித்துள்ள இந்தப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Ajith H Vinoth Boney Kapoor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment