ரசிகர்களை பார்க்க 26 ஆண்டுகள் காத்திருந்த ’தல’!...

ஹைலைட் என்னவென்றால், அந்த மாணவர்கள் அனைவரும் விஜய் ஃபேன்ஸ்.

’தல’ அஜித், சமீபத்தில் கல்லூரி ஒன்றிற்கு சென்றிருந்தார். அப்போது ரசிகர்களிடம் ’உங்களை பார்க்க 26 ஆண்டுகள் காத்திருந்தேன்’ என்று கூறிய  வரி  தற்போது ட்ரெண்டில் இடம் பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாதை அமைத்துக் கொண்டு அதில் வரும் வெற்றி, தோல்விகளை தனக்கே உரியதாக மாற்றிக் கொண்டு  வாழ்ந்து வருபவர் தான் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ’தல’ அஜித் குமார்.   கோலிவுட்டில் உள்ள உச்ச நட்சத்திரங்கள் தொடங்கி,  வேற்று மொழி நடிகர் – நடிகைகளும் அஜித்தின் தீவிர ஃபேன்ஸ் என்று மொதுமேடையில் சொல்வதுண்டு.

ரஜினி – கமலுக்கு அடுத்தப்படியாக ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுபவர்கள் தான் விஜய் – அஜித்.  சோஷியல் மீடியாவில் இவர்களின் ஃபேன்ஸ் செய்யும் லூட்டிகள் சொல்லி தீராது. ஆனால், சமீபத்தில் விஜய் ஃபேன்ஸ், அவர்களின் முகநூல் பக்கத்தில்  இரவு நேரம் பதிவிட்ட ஒரு புகைப்படம் ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும்  ஈர்த்துள்ளது.

தல அஜித்துடன் அவர்கள் எடுத்துக் கொண்ட அந்த புகைப்படம் அன்று இரவே சமூகவலைத்தளங்களில் பரவ ஆரம்பித்தது.  எங்கு? எப்போது? அஜித் உங்களிடம் பேசினாரா? என்ன சொன்னார்? என்று  அவர்கள் பதிவிட்ட புகைப்படத்தின் கீழ் வந்த கமெண்டுகள்  ஆயிரத்தைத் தாண்டியது.

அப்போது தான் விசாரித்து பார்த்ததில், அஜித் சந்தித்தது  சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியின் மாணவர்களை என்று தெரிய வந்தது.  கோலிவுட்டில் தற்போது நடைப்பெற்று வரும் ஸ்ட்ரைக் காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஓய்வு நேரத்தை பயனயாக்கிக் கொள்ள, அஜித் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜிக்கு சென்று, அங்குள்ள ஏரோ மாடலிங்  துறையில் உள்ள ஒரு சில தொழில் நுட்பத்தை பற்றி தெளிவாக தெரிந்துக் கொண்டுள்ளார்.

வழக்கம் போல், அஜித் வந்த செய்தி கேட்டவுடன் மாணவர்கள் அவரைக் காண  ஆர்வத்துடன் காத்திருந்தனர். அஜித் சென்றது இரவு நேரம் என்பதால் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்துள்ளது. பின்பு, வகுப்பில் இருந்து வெளியே வந்த அவரிடம், மாணவர்கள் ஓடி சென்று, “ சார்  12 மணி நேரம் உங்களுக்காக காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளனர். அதற்கு அஜித் “ சாரி..பா உங்களை பார்க்க நான் 26 வருடமாய் காத்திருக்கிறேன்” என்று கூறி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.

அஜித் கூறிய இந்த வரி தற்போது டாப் ட்ரெண்டில் இடம் பிடித்துள்ளது.  அதுமட்டுமில்லாமல் அவரை பார்க்க காத்திருந்த மாணவர்களுடன் அஜித் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார்.

Millions of fans are waiting to see him…..Bt being a #Thalapathy fan, I was blessed to see him…talked with him..a…

Posted by Prithiviraj Yayathirajan on 24 मार्च 2018

 

இதில் ஹைலைட் என்னவென்றால்,   அந்த மாணவர்கள் அனைவரும் விஜய் ஃபேன்ஸ். இருப்பினும், அஜித்தை சந்தித்ததைக் குறித்து நெகிழ்ச்சியுடன் அவர்கள் பதிவிட்டுள்ளனர்.  தற்போது ’விஸ்வாசம்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஜித்தின் தோற்றம் குறித்த ஒரு புகைப்படமும் சமூக வலைத்தளங்களில்  பரவி வருகிறது.

ஆனால், இந்த புகைப்படக்த்தில் இருப்பது அஜித் தானா என்ற, அதிகாரப்பூர்வமான்ன தகவல் வெளியாகவில்லை.

 

 

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close