Advertisment

மாஸ்க்குடன் மருத்துவமனையில் அஜித் - ஷாலினி : வைரலாகும் வீடியோ

வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவே அவர்கள் மருத்துவமனைக்கு சென்றதாக தெரியவந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
shalini and ajith in hospital, viral video

Ajith Shalini: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். அவர் தான் நடிக்கும் படங்களின் புரோமோஷன்களில் கலந்து கொள்ளாவிட்டாலும், ரசிகர்களை நேரடியாக சந்திக்க விட்டாலும், அவர்மீதான ரசிகர்களின் அன்பு மட்டும் குறைவதே இல்லை.

Advertisment

RS Bharathi Arrested Live: ‘நேற்று ஓ.பி.எஸ் ஊழல் குறித்து புகாரளித்தேன், இன்று நான் கைது’ – ஆர்.எஸ்.பாரதி

சின்ன விஷயங்கள் கூட சமூக வலைதளங்களில் படு ட்ரெண்டாகும். அவர் குறித்த செய்திகள், அவர் சம்பந்தப்பட்ட வீடியோக்கள், ரசிகர்களால் அதிகம் பகிரப்படும். அந்த வகையில் தற்போது அஜித், தனது மனைவி ஷாலினியுடன் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அஜித்தும், ஷாலினியும் மாஸ்க் அணிந்திருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு என்ன ஆனதோ என்ற குழப்பமும் ரசிகர்களிடத்தில் மேலோங்கியது.

பின்னர் ஷாலினியின் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவே அவர்கள் மருத்துவமனைக்கு சென்றதாக தெரியவந்தது. அந்த மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர் தான், அந்த வீடியோவை படம்பிடித்துள்ளார். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட அஜித் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Ajith Shalini
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment