Advertisment

Thala 60 & 61: தல 60, 61 ஆகியப் படங்களுக்கு இயக்குநர்கள் ரெடி!

Thala 60 & 61: அதையும் போனி கபூரே தயாரிக்க முடிவெடுத்திருக்கிறாராம். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actor ajith, kavalan app

actor ajith, kavalan app

Thala 60 & 61: நடிகர் அஜித் தற்போது ‘நேர்க்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

Advertisment

இந்தப் படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இதனைத் தயாரித்துள்ளார்.

இதில் வித்யா பாலன், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தற்போது இதன் படபிடிப்பு முழுவதும் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அஜித்தின் அடுத்தப் படம், அதாவது அவரது 60-வது படத்தையும் வினோத்தே இயக்குகிறாராம். அதையும் போனி கபூரே தயாரிக்க முடிவெடுத்திருக்கிறாராம்.

இதற்கடுத்து அஜித்தின் 61-வது படத்தை, ’விக்ரம் வேதா’ ப்ளாக் பஸ்டர் இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி இயக்குகிறார்களாம். இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

புஷ்கர் காயத்ரி தற்போது ‘வால்வாச்சர் ப்லிம்ஸ்’ என்ற தங்களது தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.

அதோடு இவர்கள் 2019-ன் இருதியில் ‘விக்ரம் வேதா’ படத்தின் ரீமேக் பணிகளையும் மேற்கொள்கிறார்கள்.

Ajith H Vinoth Pushkar Gayathri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment