Advertisment

’மர்ஜாவன்’ பாலிவுட் படத்தில் ’விஸ்வாசம்’ பின்னணி இசை: ரசிகர்கள் அதிர்ச்சி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Marjaavaan Viswasam, thala ajith, d imman

Marjaavaan Trailer: பாலிவுட் இயக்குநர் மிலாப் ஜவேரி இயக்கத்தில் ரித்தேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்ஹோத்ரா,  தாரா சுடாரியா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மர்ஜாவன்'. இதனை டி-சிரீஸ் மற்றும், எம்மா எண்டெர்டெயின்மெண்ட்  நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறது.

Advertisment

ஆக்‌ஷன் மற்றும் காதலை மையப்படுத்திய இந்தப் படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் நேற்று காலை வெளியிடப்பட்டது. மர்ஜாவன் பட ட்ரைலரைப் பார்த்த அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம், ’விஸ்வாசம்’ படத்தின் பின்னணி இசையை ‘மர்ஜாவன்’ பட ட்ரைலரின் இறுதிக் காட்சிகளில் அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த இசை விஸ்வாசம் படத்தில் அஜித்தின் அறிமுகக் காட்சிக்குப் போடப்பட்டிருந்தது.

26, 2019

அதோடு ட்ரைலரில் கொடுப்பட்டுள்ள விளக்கத்தில், விஸ்வாசம் படத்தின் பெயருடன், இசையமைப்பாளர் டி.இமானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள விஸ்வாசம் பட இசையமைப்பாளர் டி.இமான், ”‘மர்ஜாவன்’ பட ட்ரெய்லரில் ’விஸ்வாசம்’ படத்தின் பின்னணி இசை பயன்படுத்தப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது. தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து, இசை உரிமை பெற்றுள்ள நிறுவனத்திடமிருந்தோ முன்கூட்டியே எதுவும் என்னிடம் தெரிவிக்கப்படவில்லை” என்றிருக்கிறார்.

இருப்பினும் அஜித் பட இசையை பாலிவுட்டில் பயன்படுத்தியிருப்பதால், மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்!

Rakul Preet Singh Riteish Deshmukh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment