’விஜய் ஒரு நடிகரே இல்ல’, ரசிகர்களை சீண்டிப் பார்த்த மலையாள நடிகர்

Siddique about Thalapathi Vijay: அவரது ஸ்டார் அந்தஸ்து தான் அவரை திரைத்துறையில் உயர்த்தியிருக்கிறது.

Siddique about Thalapathi Vijay: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ், செண்டிமெண்ட் என சினிமாவின் அனைத்து களங்களிலும் டாப்பாக ஸ்கோர் செய்வார்.

அதோடு பாட்டு, நடனமும் இவரின் பெரிய பிளஸ்கள். இதற்காக பெரும் ரசிகர் பட்டாளத்தையும் விஜய் கொண்டிருக்கிறார்.

தமிழகத்திற்கு அடுத்தபடியாக கேரளாவில் பெருமளவு மக்கள் விஜய்யின் ரசிகர்களாக உள்ளனர்.

இந்நிலையில், மலையாள நடிகர் சித்திக், விஜய்யைப் பற்றிப் பேசிய விஷயம் அவரது ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

மலையாள திரையுலகில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இருக்கும் சித்திக் சமீபத்தில் இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “ஒவ்வொரு திரையுலகமும் சூப்பர் ஸ்டார்களை நம்பியே உள்ளது. மலையாள திரையுலகில் மம்மூட்டி, மோகன்லால் இருப்பது அதிர்ஷ்டம். இருவரும் திறமையான நடிகர்கள். ஆனால் தமிழ் சினிமாவில் அப்படியல்ல. விஜய் போன்றவர்கள் அங்கு சூப்பர் ஸ்டாராக இருக்கலாம், ஆனால் அவர் சிறந்த நடிகர் அல்ல. அவரது ஸ்டார் அந்தஸ்து தான் அவரை திரைத்துறையில் உயர்த்தியிருக்கிறது.

ஆனால் கமல் ஹாசன் சிறந்த நடிகர். அவர் சூப்பர் ஸ்டாரும் கூட” எனத் தெரிவித்தார்.

இதைக்கேட்டு விஜய் ரசிகர்கள் மிகுந்த கோபமடைந்தனர். இதற்கிடையே ‘மெர்சல்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கும் ஹரீஷ் பேரடி, “விஜய் ஒரு சூப்பர் ஸ்டார். அதே சமயம் சிறந்த நடிகரும் கூட. மற்ற சூப்பர் ஸ்டார்களைப் போல் இல்லாமல், மிகவும் தன்னடக்கம் கொண்டவர், பழகுவதற்கு இனிமையானவர். இதெல்லாம் என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் சொல்கிறேன்” எனத் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close