Advertisment

Thalapathy 64: இளம் இயக்குநருடன் விஜய்யின் அடுத்தப் படம்!

Thalapathy 64: ‘கைதி’ படத்தின் போஸ்டர் மற்றும் படங்களை விஜய்யிடம் காட்டியிருக்கிறார் லோகேஷ். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijay 62 fight

Thalapathy 64: ’சர்கார்’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தனது அடுத்தப் படத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

’தெறி, மெர்சல்’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லி இதனை இயக்குகிறார்.

இதில் நயன்தாரா, இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், கதிர், யோகி பாபு, டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

பெண்கள் கால் பந்தாட்டத்தை மையப் படுத்திய இப்படத்தில், விஜய் பயிற்சியாளராக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது.

இதற்கடுத்து ‘மாநகரம்’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். அட்லியின் படத்தை முடித்து விட்டு அடுத்தப் படத்திற்காக முன்னணி இயக்குநர்கள் உட்பட பல இயக்குநர்களிடம் கதை கேட்டிருக்கிறார் விஜய்.

அப்படி லோகேஷும் கதை சொல்ல, முதல் அமர்விலேயே விஜய் அவரை ‘டிக்’ செய்து விட்டாராம். இதற்கிடையே கார்த்தியை வைத்து தான் இயக்கியுள்ள ‘கைதி’ படத்தின் போஸ்டர் மற்றும் படங்களை விஜய்யிடம் காட்டியிருக்கிறார் லோகேஷ்.

பிவி கம்பைன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Cinema Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment