தளபதி 65: அடடா…! இந்த இயக்குநர் நம்ம லிஸ்ட்லயே இல்லையே..?

சூர்யாவை வைத்து, ‘சூரரைப் போற்று’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் சுதா கொங்கரா.

By: January 29, 2020, 10:33:05 AM

Thalapathy 65 Update: நடிகர் விஜய்யை வைத்து, இயக்குநர் அட்லீ இயக்கியிருந்த ‘பிகில்’ திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவர் சம்பந்தமான காட்சிகள் கிட்டத்தட்ட 60 சதவீதம் படமாக்கப்பட்டு விட்டன. தவிர, ‘மாஸ்டர்’ படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதும், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

ஹாய் கைய்ஸ்: சும்மா முள்ளுங்க குத்திச்சு – அதுக்கு இந்த அக்கப்போரா…..

இதற்கு அடுத்தபடியாக ‘தளபதி 65’ படத்திற்கான சலசலப்புகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. அந்தப் படத்திற்காக, புதிய மற்றும் பழைய இயக்குநர்களிடம் கதை கேட்கத் தொடங்கியுள்ளாராம் விஜய். அந்த பட்டியலில் ஏ.ஆர். முருகதாஸ், பாண்டிராஜ், பேரரசு, மகிழ் திருமேனி, லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்திக் தங்கவேல் ஆகியோர்களது பெயர்கள் அடிபடுகின்றன.

இந்நிலையில் கோலிவுட்டின் ஹாட் நியூஸ் என்னவென்றால், இயக்குநர் சுதா கொங்கராவும் விஜய்க்கு ஒரு கதையை கூறியுள்ளாராம். அது அவரை மிகவும் கவர்ந்ததால், அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, தளபதி 65 படத்திற்கான இயக்குநர்கள் பட்டியலில் இருந்து பாண்டிராஜும், சுதாவும் ஃபைனலைஸ் செய்யப்பட்டிருப்பதாகவும், நிச்சயம் இவர்களில் ஒருவர் தான், தளபதி 65-யை இயக்குவார்கள் என்றும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அம்மாவின் கவலையை விட உடல் காயம் ஒன்றும் பெரிதில்லை : அசத்திய அதர்வா

தற்போது சூர்யாவை வைத்து, ‘சூரரைப் போற்று’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் சுதா கொங்கரா. ஒருவேளை தளபதி 65-யை அவர் இயக்கினால், முதன் முதலாக விஜய்யின் பெண் இயக்குநர் என்ற பெருமையையும் அவர் பெறுவார்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Thalapathy 65 vijay sudha kongara sun pictures

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X