Advertisment

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்: ‘பிகில்’ மறு வெளியீடு

விஜய் தனது 46-வது பிறந்த நாளை ஜூன் 22 அன்று கொண்டாடவுள்ளார். ஏற்கனவே இதனை விஜய் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thalapathy Vijay Bigil movie re release in germany and france

பிகில்

தளபதி விஜய்யின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருந்தது. இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக படம் இன்னும் வெளியாகவில்லை. ரசிகர்கள் இதைப் பற்றி கவலைப்படுகையில், அவர்கள் மகிழ்ச்சியடைய இங்கே ஒரு காரணம் இருக்கிறது.

Advertisment

மகள் ஆசிர்வாதத்துடன் வனிதா விஜயகுமார் மறுமணம்…

விஜய்யின் பிளாக்பஸ்டர் படமான பிகில் திரைப்படம், 2019-ல் வெளியானது. இந்நிலையில் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனி மற்றும் பிரான்சில் அந்தப் படத்தை மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளது. இரு நாடுகளும் சில கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் திரையரங்குகளை மீண்டும் திறந்துள்ளன. எனவே, ஜூன் 22 முதல் ஜூன் 30 வரை பிகில் படத்தைத் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அட்லீ இயக்கிய, ’பிகில்’ பெண்கள் கால்பந்தை மையப்படுத்திய படம். நயன்தாரா, விவேக், கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, யோகி பாபு, இந்தூஜா மற்றும் ரெபா மோனிகா ஜான் ஆகியோர் பிகில் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

விஜய் தனது 46-வது பிறந்த நாளை ஜூன் 22 அன்று கொண்டாடவுள்ளார். ஏற்கனவே இதனை விஜய் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

சில நாட்களுக்கு முன்பு, கோவிட் -19 பயத்தின் மத்தியில் எந்தவிதமான கொண்டாட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் என்று, தனிப்பட்ட முறையில் தமிழ்நாட்டில் உள்ள தனது ரசிகர் மன்றங்களிடம் கேட்டுக்கொண்டார் விஜய். விஜய் ரசிகர் மன்ற தலைவர் என்.ஆனந்த், நாடு முழுவதும் உள்ள நடிகரின் ரசிகர்களுக்கும் இதைத் தெரிவித்தார்.

பெரிய நகரங்களில் பெங்களூருவில் மட்டும் கொரோனா பாதிப்பு எப்படி குறைவாக உள்ளது?

இதற்கிடையில், விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி, பெரும்பாலும் இந்த மாத இறுதிக்குள் வெளியிடுவார்கள் எனத் தெரிகிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tamil Cinema Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment