Advertisment

தளபதி 65: ஷங்கர் இயக்கத்தில் முதல்வராகும் தளபதி விஜய்?!

‘மாநகரம்’, ‘கைதி’ ஆகியப் படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 64’ படத்தில் நடிக்கிறார் விஜய்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Director Shankar Thalapathy Vijay combo again

Director Shankar and Thalapathy Vijay - இயக்குநர் ஷங்கருடன் தளபதி விஜய்

இன்னும் சில தினங்களில் மும்பைக்கு பறக்கவிருக்கிறார் நடிகர் விஜய். எதற்காக என்கிறீர்களா? ‘பிகில்’ படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்புக்காகத் தான்.

Advertisment

இயக்குநர் அட்லீ இயக்கும் ‘பிகில்’ படத்தை ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விவேக், நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்டோர் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார்கள். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்திய இதன் போஸ்டர்கள் விஜய் பிறந்த நாளன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்தப் படத்தை முடித்த கையோடு ‘மாநகரம்’, ‘கைதி’ ஆகியப் படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 64’ படத்தில் நடிக்கிறார் விஜய். இந்நிலையில் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாக் என்ன தெரியுமா? இயக்குநர் ஷங்கர் விஜய்யை சந்தித்து, ஒரு கதைப் பற்றி ஆலோசித்தாராம். மெகா பட்ஜெட்டில் அந்தப் படம் குறித்து விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறதாம்.

விஜய் - ஷங்கர் இணையும் அந்தப் படம் ‘முதல்வன்’ படத்தின் பார்ட் 2-வாக இருக்கும் என்கிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர். முதல்வன் படத்தை இயக்கும் போது ஷங்கரின் சாய்ஸ் விஜய்யாக இருந்ததும், சில காரணங்களால் அவர் ஏற்றுக் கொள்ளாமல் போகவே இறுதியாக அந்தப் படம் அர்ஜூனிடம் சென்று, மெகா ஹிட்டானது.

ஆகையால் விஜய் - ஷங்கர் கூட்டணியில் ’முதல்வன் 2’ உறுதியாகும் பட்சத்தில், முதல்வராக விஜய்யைப் பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள் ரசிகர்கள்.

Actor Vijay Thalapathy Vijay Shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment