Advertisment

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்யின் சமீபத்திய படம்!

Thalapathy Vijay : தயாரிப்பாளருடன், விஜய் இருக்கும் இந்தப் படம், அந்த வதந்திகளுக்கு பெரிய முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thalapathy Vijay

Thalapathy Vijay

Thalapathy 64 - Vijay's new look : இயக்குநர் அட்லீ - நடிகர் விஜய்யின் கூட்டணியில் உருவான ‘பிகில்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு, ‘தளபதி 64’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், கேஷுவலாக எடுத்துக் கொண்ட விஜய்யின் படம் இனையதளத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. அதில், சாதாரணமான கட்டம் போட்டம் சட்டையில், கூலான ஹேர் ஸ்டைலில் விஜய் தோற்றமளிக்கிறார். தளபதி 64 படத்தின் தயாரிப்பாளர் நடிகர் விஜய்யை சந்தித்திருக்கிறார், அப்போது எடுக்கப்பட்ட படம் தான் அது. படத்தின் தயாரிப்பாளர் மாற்றப்பட்டதாக முன்பு வதந்திகள் வெளியாகின. ஆனால் தயாரிப்பாளருடன், விஜய் இருக்கும் இந்தப் படம், அந்த வதந்திகளுக்கு பெரிய முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

டெல்லியில் உள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தில் விஜய் பேராசிரியராக நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியாகியது. முன்னணி பெண் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ள நிலையில், விஜய் சேதுபதி வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அங்கமாலி டைரிஸ்' படத்தின் நடிகர் அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ் ஆகியோரும், தளபதி 64-ல் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

வானத்தை தொட்ட வெங்காய விலை. கவலையில் மக்கள்!

எக்ஸ்.பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் தளபதி 64 படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment