வைரலாகும் வீடியோ: மகனின் பட்டமளிப்பு விழாவில் விஜய்யை தேடிய ரசிகர்கள்!

மகனின் பட்டமளிப்பு விழாவிற்கு விஜய் சென்றாரா? இல்லையா?

தளபதி விஜய்யின் ஒரே மகனான சஞ்சய்யின் பட்டமளிப்பு விழா வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டு உச்ச நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ‘தளபதி’ விஜய். ஆரம்பத்தில் மேடைகளில் அதிகம் பேசாத விஜய் தற்போது இசை வெளியீடு தொடங்கி நிகழ்ச்சி மேடைகள் என எல்லாவற்றிலும் துணிச்சலாக பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்.

குறிப்பாக சமீபத்தில் தனியார் விருது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய் விசாயத்திற்காக உணர்ச்சிவசப்பட்டு பேசியது பலரையும் வியக்க வைத்தது. இந்நிலையில் தான் விஜய்யின் செல்ல மகன் சஞ்சய் மற்றும் செல்ல மகள் திவ்யா ஆகியோரின் புகைப்பபடம் இணையத்தில் வெளியாகியது.

தங்களுக்கு பிடித்தமான ஹீரோவின் பிள்ளைகளை இணையத்தில் பார்த்து அவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷோஷியல் மீடியாக்களில் வைரலாக்குவதை ரசிகர்கள் பலர் அதிகம் விரும்பி செய்கின்றனர். அதே நேரத்த்தில் விஜய்யின் மகன் சஞ்சய் வேட்டையாரன் திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு பாடலுக்காக நடனம் ஆடியதை ரசிகர்கள் எளிதில் மறந்து விடவில்லை.

சுட்டியாக இருந்த சஞ்சய் தற்போது வளர்ந்துவிட்டார். பள்ளி படிப்பை முடித்து விட்டு பட்டமும் பெற்று விட்டார். சென்னையில் இருக்கும் அமெரிக்கன் இண்டர்நெஷன்ல் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்து விட்டு பட்டம் பெற்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

A post shared by VATSAN_VJ (@vatsan_vj) on

வீடியோவில் தனது அண்ணாவை தங்கை திவ்யா தான் மாலை அணிவித்து வரவேற்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் கூட்டத்தில் விஜய் எங்கு இருக்கிறார் என்று தேடி வருகிறார். மகனின் பட்டமளிப்பு விழாவிற்கு விஜய் சென்றாரா? இல்லையா? என்பது இப்போது வரை உறுதியாகவில்லை.

×Close
×Close