Advertisment

நாட்ல எவ்வளவோ பிரச்னை இருக்கும் போது இத டிரெண்ட் செய்றீங்களே? - ஆதங்கத்தில் அஸ்வின்

Vijay - Ajith: குறிப்பிட்ட சில ஹேஷ்டேக்குகளில் இரு நட்சத்திரங்களின் ரசிகர்களும் மாற்றி மாற்றி தங்களது வன்மத்தைக் கொட்டினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ashwin ravichandran on vijay ajith fans

ashwin ravichandran on vijay ajith fans

Vijay - Ajith Fans Fight: தமிழகத்தில் பல தீர்க்கப்படாத பிரச்னைகள் இருக்கும் நிலையில், அதைவிட கடினமான ஒரு பிரச்னையாக அவ்வப்போது ட்விட்டரில் விஜய் - அஜித் ரசிகர்களுக்கு இடையே வெடிக்கும் சண்டையை சொல்லலாம்.

Advertisment

தென்றல் காற்று வீசிக் கொண்டிருக்கும் போது, திடீரென சூறாவெளிக்காற்று வீசி, அச்சூழலை குலைப்பது போல், அமைதியான சோஷியல் மீடியாவில் ஏதேனும் சர்ச்சைக்குரிய ஹேஷ்டேக்கில் எதிர் கருத்துகளை முதலில் ஒருவர் துவங்க, பின்னர் அதற்கு எதிர்வினையாற்ற இன்னொருவரின் ரசிகர்கள் வரிந்துக் கட்டிக் கொண்டு வருவார்கள்.

இந்நிலையில் நேற்று மீண்டும் ட்விட்டரில் விஜய் - அஜித் ரசிகர்களின் சண்டை நடந்தது. குறிப்பிட்ட சில ஹேஷ்டேக்குகளில் இரு நட்சத்திரங்களின் ரசிகர்களும் மாற்றி மாற்றி தங்களது வன்மத்தைக் கொட்டினர்.

இதற்கிடையே இதுகுறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின், “சில நாட்களுக்கு முன்பு ஒரு சிறுகோளின் தாக்குதலில் இருந்து எங்கள் கிரகம் தப்பித்தது.  ஒழுங்கற்ற பருவமழை வெவ்வேறு நகரங்களைத் தாக்கியது. நம் நாட்டின் பல பகுதிகளில் வறட்சி மற்றும் கொடூரமான கிரிமினல் வழக்குகள் பற்றி பேசப்படுகின்றன, ஆனால் நமது அன்பான மாநில இளைஞர்கள் இதை டிரெண்ட் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

Tamil Cinema Actor Vijay Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment