Advertisment

ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடியா? வாரிசு வசூலில் மாஸ் காட்டும் விஜய்

பிரபல தெலுங்கு இயக்குநராக வம்சி இயக்கும் வாரிசு படம் ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Madras HC relief to actor Vijay in Tax evasion case

நடிகர் விஜய்

தளபதி விஜய் நடிப்பில் தமிழ் தெலுங்கில் தயாராகி வரும் வாரிசு படம் ரிலீசுக்கு முன்பே 180 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய்க்கு தமிழ் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ளார். அதனால் இவர் தமிழில் நடிக்கும் படங்கள் நேரடியாக மலையாளத்திலும் தெலுங்கில் டப் செய்தும் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் கடந்த தமிழ் புத்தாண்டு ஆண்டு அன்று பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5 மொழிகளில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது, ஆனாலும் அந்த படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில். விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடினர்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில். பிரபல தெலுங்கு இயக்குநராக வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். ஒரு நேரத்தில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தில் ரேஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வரும நிலையில் சரத்குமார் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலர் நடித்து வருகின்றனர்.

அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது ரிலீசுக்கு முன்பே வாரிசு படம் 180 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்காக தொலைக்காட்சி உரிமம், ஒடிடி உரிமம். பாடல்கள் மற்றும் வெளிநாட்டு ரிலீஸ் உரிமம் என 180 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதில் குறிப்பாக ஓடிடி உரிமத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் 60 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில். இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“

Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment