நடிகையை மணந்த இயக்குநர்

இவர்கள் இருவருக்கும் 25 வயது வித்தியாசம் என்பதுதான் பலரின் புருவங்களை உயர வைத்துள்ளது.

சர்சைக்குரிய படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘ஒரு இயக்குநரின் காதல் கதை’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஷெர்லி தாஸ். முப்பது வயதான நடிகை ஷெர்லி தாஸை 65 வயதான இயக்குநர் வேலு பிரபாகரன் இன்று திருமணம் செய்து கொண்டார். பத்திரிகையாளர்கள் மத்தியில் இருவரும் மோதிரம் மாற்றி, எளிமையாக திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் குறித்து நடிகை ஷெர்லி தாஸிடம் கேட்ட போது, ‘எனக்கு அவரைப் பிடித்திருந்தது. அவரை திருமணம் செய்து கொள்ள வேறு எதுவும் பிரச்னையாக இருக்கவில்லை’ என்றார்.

இயக்குநர் வேலு பிரபாகரனிடம் கேட்ட போது, ‘எந்த ஒரு வாழ்க்கையும் துணை இல்லாமல் நிறைவு பெறாது. எனக்கு துணை தேவை என்று தோன்றியது. அந்த துணை ஷெர்லி என்பதை உணர்ந்தேன். உடன் திருமணம் செய்து கொண்டேன்’ என்றார்.

இவர்கள் இருவருக்கும் 25 வயது வித்தியாசம் என்பதுதான் பலரின் புருவங்களை உயர வைத்துள்ளது.

இயக்குநர் வேலு பிரபாகரன் நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close