தனது கடை விளம்பரத்தில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமான அருள் சரவணன் தற்போது தி லெஜெண்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌவுடேலா மற்றும் கீர்த்தி திவாரி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ள இந்த படம் இன்று (ஜூலை 28) வெளியானது. ஆக்ஷன் படமாக வெளியாகியுள்ள தி லெஜெண்ட் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை மற்றும் வேல்ராஜூன் ஒளிப்பதிவு பெரிய பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஆனாலும் கதை பழைய பாணியில் இருப்பதாகவும், ஒரு சில முக்கிய காட்சிகளைத் தவிர, படத்தில் புதியதாக எதுவும் இல்லை என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக திரையரங்குகள் மற்றும் ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் உடனடியாக இணையதங்களில் வெளியாவது தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாது சிறு பட்ஜெட் படங்களும் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், அந்த வரிசையில் தற்போது தி லெஜெணட் இணைந்துள்ளது.
இன்று காலை திரையிடப்பட்ட தி லெஜெண்ட் திரைப்படம் தற்போது ஆன்லைன் இணையதங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அருள் சரவணன் விஞ்ஞானி வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் மருத்துவத் துறையில் உள்ள அவலங்களை குற்றங்களையும் சுட்டிக்கட்டும் வகையில திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
விஜயகுமார், பிரபு, விவேக், சுமன், நாசர், லிவிங்ஸ்டன், யோகி பாபு, வம்சி கிருஷ்ணா, தீபா சங்கர், சிங்கம்புலி, மயில்சாமி, லதா, ரோபோ சங்கர், மன்சூர் அலிகான், பெசன்ட் ரவி, அஷ்வந்த் அசோக்குமார், மானஸ்வி கொட்டாச்சி, யாஷிகா ஆனந்த், ராய் லட்சுமி, சச்சு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதிய இப்படத்திற்கு ரூபன் எடிட் செய்துள்ளார். தி லெஜண்ட்டை அருள் சரவணன் தனது சரவணன் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்துள்ள இந்த படத்தை ஜே.டி – ஜெர்ரி ஆகியோர் இயக்கியுள்ளளனர். கோபுரம் சினிமாஸ் வெளியிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.