Vijayalakshmi in bigg boss 2, Bigg Boss Tamil 2 Wild Card Entry
Bigg Boss Tamil 2 Wild Card Entry : பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் புதிய நபராக நடிகை விஜயலட்சுமி வைல்ட் கார்டு எண்டிரியாக நுழைகிறார். இதற்காக அவர் நடித்திருந்த சீரியலையே விட்டு வந்தார் என்றால் உங்களால் நம்ப முடியுமா?
Advertisment
Bigg Boss Tamil 2 Wild Card Entry : விஜயலட்சுமி:
சென்னை 28 படத்தின் மூலம் 2007ம் ஆண்டு தமிழ் மக்களிடையே அறிமுகமானவர் இவர். இதன் பிறகு, அஞ்சாதே, சரோஜா, கற்றது களவு, வன யுத்தம், சென்னை 28 பாகம் 2 என இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றியை தழுவியுள்ளது.
பிக் பாஸ் 2 வீட்டின் உள்ளே நுழையும் விஜயலட்சுமி
Advertisment
Advertisement
2016ம் ஆண்டு வெளியான சென்னை 28 பாகம் 2 படத்தின் நீண்ட இடைவேளைக்கு பின்னர் இந்த ஆண்டு பிரபல தனியார் தொலைகாட்சியில் தொடங்கிய ‘நாயகி’ என்ற சீரியல் மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
Bigg Boss Tamil 2 Wild Card Entry : வைல்ட் கார்டு எண்டிரி விஜயலட்சுமி:
கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி நடிகை விஜய்லட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தவிற்க்க முடியாத காரணங்களால் ‘நாயகி’ சீரியலில் ஆனந்தியாக தொடர முடியாது என்றும், ஆனால் இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்க உள்ளேன்’ என்று தெரிவித்தார்.
Due to unavoidable reasons, I cannot continue to be your anandhi in #nayagi anymore!
But so moved by all your love and support. Overwhelming❤!!
இதனை தொடர்ந்து, இன்று வெளியான பிக் பாஸ் 2 பிரொமோவில், வைல்ட் கார்டு எண்டிரியாக இவர் அந்த வீட்டிற்குள் நுழைகிறார்.
பிக் பாஸ் 2 வீட்டின் உள்ளே செல்வதற்கு முன்னதாக, மக்களுக்காக ஒரு வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதில், ‘இவ்வளவு நாள் என்னை பல கதாப்பாத்திரத்தில் பார்த்திருப்பீர்கள், இப்போது விஜயலட்சுமியாக பார்க்க போகிறீர்கள். நான் விஜயலட்சுமியாக உள்ளே செல்கிறேன். உங்களின் அன்பு எனக்கு தேவை’ என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த வருகையையொட்டி வீட்டின் உள்ளே இருக்கும் பலரும் இவரை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாதி நிகழ்ச்சியை பார்த்துவிட்டு உள்ளே சென்ற பிரபலங்களால் பல திருப்பங்கள் நடந்தது. அது போன்ற பரபரப்பான திருப்பங்கள் ஏதேனும் விஜயலட்சுமி வருகைக்கு பின்னர் நடக்குமா என்பதை காத்திருந்து பார்ப்போம்.