Advertisment

மார்ச் 8 மொத்தம் 3 படம் ரிலீஸ்... கல்லாப்பெட்டியை நிரப்பும் படம் எதுவா இருக்கும்?

This weekend movie release list : பொட்டு, பூமராங்க் மற்றும் சத்ரு... வசூல் வேட்டைக்கு தயார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Today Movie Release

This weekend movie release in tamil : கடந்த வாரம் 4 படங்கள் வெளியாகி 2 படங்கள் வசூலை குவித்து வரும் நிலையில் இந்த வாரம் 3 படங்கள் வெளியாக தயார்.

Advertisment

எல்லா வாரமும் ஏதாவது ஒரு புதிய படங்கள் வெளியாவது வழக்கம். பெரிய பட்ஜெட்டில் இல்லையென்றாலும், சிறிய பட்ஜெட்டிலாவது நிச்சயம் இரண்டு படங்கள் வெளியாகும். அந்த வகையில் இந்த வாரமும் நடுத்தர பட்ஜெட்டில் 3 படங்கள் வெளியாகிறது.

weekend movie release : இந்த வார ரிலீஸ் படங்கள்

பல ஆண்டுகளாக படப்பிடிப்புகள் முடிந்தும் வெளியாகாமல் நீண்ட இடைவேளைக்கு பிறகு இறுதியாக தியேட்டர்களில் கால் பதிக்கிறது நடிகர் பரத்தின் பொட்டு. பின்னர் விவசாயிகள், தண்ணீர் பிரச்சனை என சமூக நலன் விஷயங்களை கொண்டு நடிகர் அதர்வா நடிப்பில் வெளியாக தயாராக இருக்கிறது பூபராங்க். மேலும், பரியேரும் பெருமாள் மற்றும் சிகை ஆகிய பாங்கள் மூலம் பிரபலமான கதிர், முதன் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்ரு படமும் வெளியாகிறது.

பொட்டு

இயக்குநர் : வி.சி. வடிவுடையான்

நடிகர்கள் : பரத், இனியா, ஸ்ருஷ்தி தங்கே, நமிதா மற்றும் பலர்

இசையமைப்பாளர் : அம்ரிஷ்

சத்ரு

இயக்குநர் : நவீன் நஞ்சுந்தன்

நடிகர்கள் : கதிர், ஸ்ருஷ்தி தங்கே, சுஜா வரூணி, நீலிமா, பொன்வண்ணன், மாரிமுத்து மற்றும் பலர்

இசையமைப்பாளர் : அம்ரிஷ்

பூமராங்க்

இயக்குநர் : ஆர். கண்ணன்

நடிகர்கள் : அதர்வா, ஆர்.ஜே. பாலாஜி, மேகா ஆகாஷ், இந்துஜா மற்றும் பலர்

இசையமைப்பாளர் : ராதன்

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment