Advertisment

வாரிசை முந்திய துணிவு: முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்

Thunivu box office collection day 1: எச்.வினோத் இயக்கிய, ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படமான துணிவு இந்தியாவில் முதல் நாளில் ரூ. 26 கோடி வசூலித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது

author-image
WebDesk
New Update
Thunivu

Thunivu box office collection day 1: Ajith Kumar’s action film takes top spot in Tamil Nadu

பொங்கல் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் துணிவு மற்றும் வாரிசு படங்கள் புதன்கிழமை வெளியாகின. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் விஜய்யின் வாரிசு விட அஜித்தின் துணிவு வசூலில் முந்தியது. எச்.வினோத் இயக்கிய, ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படமான துணிவு இந்தியாவில் முதல் நாளில் ரூ. 26 கோடி வசூலித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது வாரிசை வெறும் ரூ.50 லட்சம் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

Advertisment

தொழில்துறை தரவு கண்காணிப்பாளரான சாக்னில்க் கருத்துப்படி, தமிழ்நாடு பகுதியில் துணிவு மோகம் அதிகமாக இருந்தது. வாரிசு சுமார் 17 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், துணிவு 18 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் மேலும் ரூ.3.5 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் ரூ.2.5-ரூ.3 கோடியும், கேரளாவில் ரூ.1.5 கோடியும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் ரூ.50 லட்சமும் சேர்த்தது.

சமீபத்திய ஆண்டுகளில், தென்னிந்தியத் திரைப்படங்கள் - குறிப்பாக தெலுங்கு மொழி படங்கள் நாடு தழுவிய அளவில் வெற்றி பெற்றுள்ளன. KGF 2 மற்றும் காந்தாரா ஆகிய இரண்டு கன்னட மொழித் திரைப்படங்கள் கடந்த ஆண்டு ரன்வே ஹிட் ஆனது.

ஒரு காலத்தில் நாட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களைக் கொண்டிருந்த தமிழ் சினிமா, பாலிவுட்டோடு சேர்ந்து தனது பொலிவை இழந்துவிட்டதாகத் தோன்றுகிறது. விஜய் மற்றும் அஜித்தின் பீஸ்ட் மற்றும் வலிமை படங்கள் விமர்சன மற்றும் வணிக ரீதியாக ஏமாற்றம் கண்டது.

ஒவ்வொரு பெரிய தென்னிந்திய திரைப்படமும் வடக்கில் ஒரு அடையாளத்தை உருவாக்க இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. உதாரணமாக, முதல் நாளில் டெல்லி பிராந்தியத்தில் துணிவு திரைப்படம் 30% மட்டுமே ஆக்கிரமிக்க முடிந்தது.

ஆனால் உள்ளூர் ரசிகர்கள் அதை ரசித்ததாக தெரிகிறது. தமிழ் வெர்ஷனுக்கான சராசரி ஆக்கிரமிப்பு காலை 61% இல் இருந்து இரவு காட்சிகளுக்கு 82% ஆக உயர்ந்தது. சென்னையில் நாள் முழுவதும் சராசரியாக 98.25% ஆக்கிரமிப்புகளைக் கண்டது, அதே நேரத்தில் பாண்டிச்சேரி முதல் நாளில் 99.5% ஆக்கிரமிப்பைக் கண்டது.

மேலும் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி நடித்த துணிவு விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்தியன் எக்ஸ்பிரஸின் கிருபாகர் புருஷோத்தமன் தனது விமர்சனத்தில், ’முதல் பாதியின் ஸ்டைலும், மர்மமும் இடைவேளைக்குப் பிறகு சீக்கிரம் ரிவீல் ஆகிறது, மேலும் படம் ஒன்றன் பின் ஒன்றாக சோகமான கதையைச் சொல்லத் தொடங்குகிறது, இது படத்தின் டார்க் இயல்புக்கு பொருந்தவில்லை’ என்று எழுதினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment