Advertisment

Box Office Collection 2019: பாக்ஸ் ஆபிஸில் யாரு கிங்? - அதிக வசூல் செய்த படங்களின் லிஸ்ட்!

Kollywood Box Office Collection 2019 : சிறிய பட்ஜெட், ஆனால் அழுத்தமான கதைகளம் என்பதால் சில படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், அவைகளால் பாக்ஸ் ஆஃபிஸில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Top 10 Box office collection tamil 2019

Top 10 Box office collection tamil 2019

Top 10 Box Office Collections Tamil 2019: இந்த வருடம் அதாவது ஜனவரி 2019 முதல், கடந்த வாரம் வரை கிட்டத்தட்ட 180-க்கும் அதிகமான படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த எண்ணிக்கை 200-ஐ தொடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இதில் பெரிய ஹீரோக்கள், இரண்டாம் கட்ட ஹீரோக்கள், வளர்ந்து வரும் நடிகர்கள், சிறிய பட்ஜெட் படங்கள் என அனைத்தும் அடங்கும்.

Advertisment

சிறிய பட்ஜெட், ஆனால் அழுத்தமான கதைகளம் என்பதால் சில படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், அவைகளால் பாக்ஸ் ஆஃபிஸில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பெரிய ஹீரோக்களின் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் 2019-ம் ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற முதல் 10 படங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.

பிகில்  

top 10 box office collection 2019, bigil box office தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படம் 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியிருந்த இந்தப் படத்தை இயக்குநர் அட்லீ இயக்கியிருந்தார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து, ஸ்கிரீன் சீன் மீடியா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டது. பாக்ஸ் ஆஃபீஸ் வசூல்: அஜித்தின் விஸ்வாசம் சாதனையை முறியடித்த விஜய்யின் பிகில்!

பேட்ட 

Petta Box Office Collection, பேட்ட தியேட்டர் வசூல் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருத்து வெளியிட்டது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார். தமிழகத்தில் 600 திரையரங்குகளில் வெளியான பேட்ட, 23 நாட்களில் 200 கோடி வசூலித்தது. 

விஸ்வாசம்

viswasam box office collection இதுவும் கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் தான். நடிகர் அஜித் நடித்திருந்த இந்தப் படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் வெளியிட்டிருந்தது.

நேர்க்கொண்ட பார்வை

Nerkonda paarvai box office collection இந்தியில் வெளியான ’பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இதனை, ஹெச். வினோத் இயக்கியிருந்தார். முன்னணி கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார். ஜி ஸ்டூடியோஸுடன் இணைந்து போனி கபூர் தயாரித்திருந்த இந்தப் படத்தை, எஸ்.பிக்சர்ஸும், கந்தசாமி ஆர்ட்ஸும் வெளியிட்டன.

காஞ்சனா 3

Kanchana 3 Box Office Collection கோடை விடுமுறைக்கு வெளியான இப்படத்தை இயக்கி, நடித்திருந்தார் ராகவா லாரன்ஸ். சன் பிக்சர்ஸ் - ராகவா லாரன்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து காஞ்சனா 3-யை தயாரித்திருந்தன. kanchana 3 Movie collections: பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பிய காஞ்சனா 3

கைதி 

Kaithi box office collection தீபாவளிக்கு வெளியான கைதி திரைப்படமும் 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.

அசுரன்

asuran box office collection விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற அசுரன் திரைப்படம், வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றது. 100 கோடிக்கும் மேல் வசூலித்த முதல் தனுஷ் படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றது. இயக்குநர் வெற்றி மாறன் இயக்கியிருந்த இப்படத்தை வி கிரியேஷன்ஸ் தயாரித்து வெளியிட்டது. 80 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. Asuran Box Office: 100 கோடி வசூலித்த தனுஷின் முதல் படம்!

காப்பான் 

Kaappaan box office collection சூர்யா நடித்திருந்த இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார். லைகா புரொடக்‌ஷன் தயாரித்து வெளியிட்டது. படமும் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

என்.ஜி.கே

NGK box office collection செல்வராகவன் இயக்கியிருந்த இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் வெளியிட்டது.

Actor Vijay Rajinikanth Ajith Actor Suriya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment