கொரோனா காலத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் திக்கி திணறிக் கொண்டிருக்கின்றோம். சமூக வலைதள பக்கங்கள் எப்போதும் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டே தான் இருக்கிறது. சினிமா பிரபலங்கள் தங்களின் ரசிகர்களை எப்போதும் மகிழ்விக்க, தன்னுடைய அன்றாட வாழ்வில் என்ன நடைபெறுகிறது என்பதை மறக்காமல் பதிவு செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக மலையாள தேசத்தில் பிறந்து வளர்ந்த அனைத்து ஹீரோயின்களின் கனவுகளும் வேஷ்ட்டியில் வலம் வருவது என்று தான் தோன்றுகிறது.
மாளவிகா மோகனனும் அதற்கு விதிவிலக்கில்லை பாருங்கள். ஒரே ஒரு பச்சை நிற வேஷ்ட்டியை வைத்துக் கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்து வருகிறார். நேற்று வெளியிட்ட அந்த பச்சை நிற வேஷ்ட்டி அணிந்த போட்டோ லைக்குகளையும் கமெண்ட்க்களையும் அள்ளி வருகிறது.
தற்போது இது தான் என்னுடைய சௌகரியமான ஆடை என்றும் அறிவித்திருக்கிறார் மாஸ்டர் ஹீரோயின். கொரோனா லாக்டவுன் மட்டும் ஏற்படவில்லை என்றால் இந்நேரத்திற்கு மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வந்திருக்கும். இந்த படத்தின் ரிலீஸிற்கு தான் காத்துக் கொண்டிருக்கிறார் மாளவிகா.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil