கூல் தோனியின் மற்றுமொரு அவதாரம் : கிரேட் சல்யூட் டூ தோனி....

Dhoni as TV show producer : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ராணுவ வீரர்களின் வாழ்க்கை குறித்த சின்னத்திரை...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ராணுவ வீரர்களின் வாழ்க்கை குறித்த சின்னத்திரை நிகழ்ச்சியை விரைவில் தயாரித்து வழங்க உள்ளார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல வியத்தகு சாதனைகளை நிகழ்த்தியவர் கேப்டன் மகேந்திர சிங் தோனி. தற்போது அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அவர் விளையாட்டில் தீவிர கவனம் செலுத்தி வந்த நிலையிலும் கூட, ராணுவ வீரர்களுடன் பெருமளவு நேரம் செலவழித்து வந்தார்.

விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடித்த தமிழக இஞ்ஜினியர்

இதனிடையே, பரம் வீர் சக்ரா மற்றும் அசோக சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர்கள் தொடர்பான நிகழ்ச்சியை, தோனி விரைவில் தயாரித்து வழங்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு தோனிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது, தோனி, கிரிக்கெட் விளையாட்டில் தீவிர கவனம் செ லுத்திவந்த போதே, இந்திய ராணுவத்தில் இரண்டு வார காலம் ராணுவ பயிற்சி எடுத்துக்கொண்டார். அவருக்கு சிறுவயது முதலே, ராணுவம், ராணுவ வீரர்கள். அவர்களின் நாட்டுப்பற்று, தியாக உள்ளம் உள்ளிட்டவைகளின் மீது தீராத ஆர்வம் உண்டு.

இதன்காரணமாக, ராணுவ வீரர்களின் வாழ்க்கை, அவர்களின் தியாகம் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்ட சின்னத்திரை நிகழ்ச்சியை, தோனி தயாரித்து வழங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, தோனி எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனம், ஸ்டூடியோநெக்ஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து ஈடுபட உள்ளது. தற்போது ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதாகவும், 2020ம் ஆண்டில் இந்த நிகழ்ச்சி, சோனி டிவியில் ஒளிபரப்பாக திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தோனி, ஹாட்ஸ்டார் சேனலில், Roar of the Lion, featuring Captain Cool himself என்ற நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது,. இந்த நிகழ்ச்சியில், தோனியின் ஐபிஎல் வாழ்க்கை குறித்து விவரிக்கப்பட்டிருந்தது.

தோனியின் வாழ்க்கை வரலாறு படமான M.S Dhoni: The Untold Story 2016ம் ஆண்டு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close