ரெண்டு ஹீரோயின்கள்... ரெண்டு மொழி... சிரஞ்சீவியின் அடுத்த படம்

வெள்ளையர்களுக்கு எதிரான சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற ஒரு குறுநில மன்னனின் கதையாம் இது.

தமிழில் ராணுவ வீரன், மாப்பிள்ளை படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்திருக்கிறார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. அரசியலில் நுழைந்தவர் அதற்கு சிலகாலம் ஓய்வு கொடுத்துவிட்டு படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்.

விஜய் நடித்த கத்தி படத்தை ரீமேக் செய்து மெகா ஹிட் அடித்தவர் அடுத்து நடிக்கவிருப்பது தமிழ் தெலுங்கு என இரண்டு மொழி படம் ஒன்றில். சிரஞ்சீவி மகன் ராம்சரண் தயாரிக்கும் இந்த படத்துக்கு உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்று பெயரிட்டுள்ளார்கள். வெள்ளையர்களுக்கு எதிரான சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற ஒரு குறுநில மன்னனின் கதையாம் இது.

அடுத்த ஆண்டு சம்மரில் வெளியாகவிருக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு இரண்டு ஹீரோயின்கள் ஜோடிகளாக நடிக்கிறார்கள்.

×Close
×Close