Advertisment

7 வருட டேட்டிங்; மெரினா ரொமான்ஸ்; உதயநிதி- கிருத்திகா பர்சனல் ஷேரிங்ஸ்

சத்தியமா நான் அரசியலுக்கு போகமாட்டேனு சொன்னாரு; பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸூடன் தங்கள் பர்சனல் வாழ்க்கையை பகிர்ந்துக் கொண்ட உதயநிதி – கிருத்திகா

author-image
WebDesk
New Update
7 வருட டேட்டிங்; மெரினா ரொமான்ஸ்; உதயநிதி- கிருத்திகா பர்சனல் ஷேரிங்ஸ்

Udhayanadhi and Kiruthiga share their personal life: 7 வருடம் காதலித்து திருமணம் செய்துக் கொண்டோம், இப்ப 20 வருடம் ஆகிவிட்டது என மகிழ்ச்சியுடன் தங்களின் பர்சனல் வாழ்க்கையை பகிர்ந்துள்ளனர் உதயநிதி – கிருத்திகா தம்பதியினர்.

Advertisment

திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின். ஒரு கல் ஒரு கண்ணாடி முதல் நெஞ்சுக்கு நீதி வரை நடித்து, தற்போதும் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் இவரின் மனைவி கிருத்திகா உதயநிதி ஒரு இயக்குனர். வணக்கம் சென்னை, காளி உள்ளிட்ட படங்களை இயக்கிய கிருத்திகா, தற்போது பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸை இயக்கியுள்ளார். இந்தநிலையில், தங்களின் காதல், அரசியல் உள்ளிட்ட பர்சனல் விஷயங்கள் குறித்து கலாட்டா தமிழ் யூடியூப் சேனலில் பேசியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: விக்னேஷ் சிவனுக்கு குட்டி ஸ்டோரி சொன்ன கமல்: வைரல் வீடியோ

அதில், 96 படத்தை குடும்பத்துடன் பார்த்தபோது, இப்படி தான் உங்க பையன் எங்கிட்ட லவ் சொன்னாரு என ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினிடம் சொன்னேன் என கிருத்திகா கூறுகிறார். மேலும், உதயநிதி முதலில் ப்ரொபஸ் செய்தபோது, அரசியல் குடும்பம் என நிராகரித்துவிட்டதாகவும் கிருத்திகா கூறுகிறார். அதற்கு உதயநிதி, என் தங்கச்சிக்கு பிறந்த நாள் தயவு செய்து லவ் ஏத்துக்க என்று கெஞ்சி ஒத்துக்க வெச்சேன் என்று சொல்கிறார். என் தங்கச்சி சப்போர்ட் கிருத்திகாவுக்கு தான் என உதயநிதி சொல்கிறார்.

அப்போது உதயநிதி பேப்பர் ராக்கெட் அடங்கிய சட்டை அணிந்திருப்பது குறித்து பேசும்போது, சட்டையை போட சொல்லி கிருத்திகா கட்டாயபடுத்துனாங்க என்ற தொனியில் உதயநிதி கூற, அவர் கேமரா முன்னாடி நல்லா நடிப்பார் என சொல்கிறார் கிருத்திகா. பின்னர் பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸ் இயக்கம் குறித்து கிருத்திகாவை பாராட்டுகிறார் உதயநிதி.

அடுத்ததாக ஏதாவது சொல்லமா வெளியில் போயிட்டு வந்தா, ஏதாவது தப்பு பண்ணா கிருத்திகாகிட்ட சரண்டர் ஆகிவிடுவேன் என்று உதயநிதி சொல்கிறார். அடுத்து, காதலிக்கும்போது அவர்கிட்ட வண்டி கிடையாது, நான் தான் பிக்கப் பண்ணுவேன், மெரினாவில் ரொமான்ஸ் பண்ணுவோம் என கிருத்திகா சொல்கிறார்.

பின்னர், சத்தியமா நான் அரசியலுக்கு போகமாட்டேனு சொன்னாரு என சொல்ல சிரிக்கிறார் உதயநிதி. பிரசவ காலத்தில் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பயம் இருக்கும், உதயநிதி என் கூடவே இருந்தார் என நெகிழ்ச்சியாக கூறுகிறார் கிருத்திகா.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment