Advertisment

உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்கிறார் தமன்னா

சீனு ராமசாமி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
udhayanidhi stalin

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில், தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார்.

Advertisment

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘தர்மதுரை’ படத்துக்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து அடுத்த படத்தை இயக்க இருக்கிறார் சீனு ராமசாமி. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்கு ‘கண்ணே கலைமானே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். சீனு ராமசாமியின் முந்தைய படமான ‘தர்மதுரை’யிலும் ஹீரோயினாக தமன்னா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் ஷூட்டிங், ஜனவரி 19ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.

சீனு ராமசாமி இயக்கிய ‘நீர்ப்பறவை’ படத்தைத் தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின். தற்போது அவர் இயக்கத்தில் முதன்முதலாக நடிக்கிறார். சீனு ராமசாமி இயக்கிய ‘இடம் பொருள் ஏவல்’ படம் ரிலீஸுக்காக வருடக்கணக்கில் காத்திருக்கிறது.

 

Tamil Cinema Udhayanidhi Stalin Seenu Ramasamy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment