Advertisment

ரஜினி மகளுக்கு கொரோனா முதல் வலிமை அப்டேட் வரை.. பல சுவாரசியமான சினிமா செய்திகள்!

வலிமை படம் வரும் 24 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
cinema updates

ரஜினி மகளுக்கு கொரோனா முதல் வலிமை அப்டேட் வரை.. பல சுவாரசியமான சினிமா செய்திகள்!

வலிமை, ராதே ஷியாம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்...

Advertisment

பாகுபலி புகழ் பிரபாஸ், நடிகை பூஜா ஹெக்டே ஆகியோரின் நடிப்பில் தயாராகியுள்ள ராதே ஷியாம் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் டிரைலர் ஒரு மாதத்திற்கு முன்பு வெளியாகி’ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார். படம் தயாராகி விட்டாலும் கொரோனா காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப்போடப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் பிரபாஸ் வெளியிட்ட பதிவில், மார்ச் 11-ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என அவர் அறிவித்துள்ளார்.

ஆர்ஆர்ஆர் படத்துக்கு முன்பே இந்தப் படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, வலிமை படம் வரும் 24 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி அஜித் குமார் நடிப்பில் வெளியாக இருந்த வலிமை படம்’ கொரோனா மூன்றாவது அலை எழுச்சியால் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் படத்தின் ரிலீஸ் தேதியை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

காத்திருப்பு முடிவடைந்தது, வரும் 24ஆம் தேதி உலகம் முழுவதும் வலிமை படம் ரிலீஸ் ஆகும் என்று அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியின் மகளுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

திரைப்பட இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படத்தை பகிர்ந்து இஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவிட்டேன். மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுங்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள்.

எனக்காக 2022 இன்னும் என்னவெல்லாம் வைத்திருக்கிறது என்று பார்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவருடை ரசிகர்கள் விரைந்து குணமடைய வேண்டி’ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் 18 ஆண்டுகள் கணவன்-மனைவியாக சேர்ந்த வாழ்ந்தனர். அண்மையில் இருவரும் பிரிவதாக இருவரும் கூட்டாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ராம் பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சர்பிரைஸ் விசிட் அடித்த பிரபல இயக்குநர்

இயக்குநர் ராம் தனித்துவமான படங்களை இயக்குவதில் திறமை படைத்தவர்.

அவர் இயக்கிய கற்றது தமிழ், பேரன்பு, தங்க மீன்கள், தரமணி ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள்.

மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ள நிவின் பாலியை  கதையின் நாயகனாக வைத்து படம் ஒன்றை இயக்குநர் ராம் தற்போது இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியும் உள்ளார்.

நடிகர் சிம்பு-இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி நல்ல வசூலை ஈட்டிய மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் செட்டுக்கு பிரபல இயக்குநரும், இயக்குநர் ராமின் நண்பருமான மிஷ்கின் திடீர் விசிட் அடித்தார்.

இது நிவின் பாலி, சூரி ஆகியோருக்கு ஆச்சரியத்தைத் தத்தது. அப்போது, ரயில் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டிருந்ததால் ரயிலில் அமர்ந்தபடியே மிஷ்கின், நிவின் பாலி, சுரேஷ் காமாட்சி, சூரி, ராம் ஆகியோர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்தப் புகைப்படத்தை நிவின் பாலி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் சூரியும், ‘இன்று இனியதொரு தொடக்கம். இயக்குனர் அண்ணன் ராம் மற்றும் பிரதர் நிவின் பாலி யுடன் முதல்முறையாக 'பயணிப்பதில்' பெரு மகிழ்ச்சி. அண்ணன் சுரேஷ் காமாட்சிக்கு நன்றி’  என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மாநாடு பாணி கதையில் நடிகை டாப்ஸி

நடிகர் சிம்பு நடிப்பில் மாநாடு படம் டைம் லூப் கான்செப்டில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றது.

அதே பாணியில் நடிகை டாப்ஸி நடிப்பில்’ ஹிந்தியில் ஒரு படம் தயாராகி உள்ளது. இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸில் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகிறது.

இந்தப் படம் குறித்து டாப்ஸி’ தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ’நான் வழக்கமான கதையில் நடிக்க விரும்புவதில்லை. எனக்கு வரும் கதைகளும் வித்தியாசமான கதாபாத்திரங்களுடனே வருகிறது.

டைம் லூப் கான்செப்டில் உருவாகியுள்ள ‘லூப் லபேடா’ படத்திலும் எனக்கு சவாலான கதாபாத்திரம் தான். நான் ஏன் கமர்ஷியல் சினிமாவில் நடிப்பதில்லை என்று கேட்கின்றனர். அந்த கேள்வியே எனக்கு புரியவில்லை.

கமர்ஷியல் சினிமா என்றால் என்ன ? பணத்தை வசூலிப்பது மட்டுமே கமர்ஷியல் சினிமாவா ? அல்லது ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடுவது கமர்ஷியல் சினிமாவா? திரையரங்கை விட்டு வெளியே வந்ததும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று மற்றவர்களுக்கு பரிந்துரை செய்வதே சிறந்த படமாகும். அதுபோன்ற படங்களில் மட்டுமே நான் நடிக்க விரும்புகிறேன்’ என்றார்.

படத்தின் டிரைலர் இதோ…

பிரபல பாலிவுட் காதல் ஜோடியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த சமையல் கலைஞர்

பாலிவுட்டில் முன்னணி நடிகரான ரண்பீர் கபூர், நடிகை அலியா பட் ஆகியோர் காதலித்து வருகின்றனர். இவர்களின் சமையல் கலைஞர் ஹர்ஷ். ஹர்ஷுக்கு உதவியாளராக சேர்ந்த ஷாஸ்த்ரி என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரண்பீர், அலியா பட்டுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில்:

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமையல் கலைஞர் ஹர்ஷுக்கு உதவியாளராக சேர்ந்தேன். அவருடன் சேர்ந்த பின்னர் கடந்த 6 மாதங்களாக உங்கள் இருவருக்கும் ருசியான சமையலை செய்து தருவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தினமும் புதுப்புது விஷயங்களை சமையலில் கற்றுக் கொள்கிறேன். உங்களுக்கு மேலும் விதவிதமாக சமைத்து தர வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன்.

ஹர்ஷின் ஆதரவு இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது. உங்கள் ஆதரவுக்கும் வழிகாட்டுதலுக்கும் என் மீது நம்பிக்கை வைத்திருப்பதற்கும் மிக்க நன்றி ஹர்ஷ் என்று அந்தப் பதிவில் ஷாஸ்த்ரி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில் அலியா பட்டை காதலிப்பதை ரண்பீர் அறிவித்தார். கொரோனா பிரச்சனை இல்லாதிருந்திருந்தால் திருமணம் முடிந்திருக்கும் என்று கூறியிருந்தார்.

அலியா பட்டும்’ அவ்வப்போது ரண்பீருடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அலியா பட் நடிப்பில் ஆர்ஆர்ஆர் படம் வெளியாக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ரண்பீர் கபூர், ஷம்ஷெரா என்ற ஹிந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment