Vani Jayaram Super Hit Songs | Indian Express Tamil

ஒரே நாள் உன்னை நான்! வாணி ஜெயராம் சூப்பர் ஹிட் சாங்க்ஸ் கலெக்ஷன்ஸ்

இன்று ரசிகர்களால் ‘வாணி அம்மா’ என்று அழைக்கப்படும் அவரது திரையிசைப் பயணம் பல சாதனைகளை உள்ளடக்கியது. மதங்களைக் கடந்து பக்திப் பாடல்களும், தனி ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார்.

Vani Jayaram Super Hit Songs
Vani Jayaram Super Hit Songs

‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ’ என்ற பாடலின் மூலம் தமிழிசை ரசிகர்களின் மனதில் பதிந்தவர் பழம்பெரும் பாடகி வாணி ஜெயராம். 1971-ம் வருடப் புத்தாண்டு தினத்தில் வெளிவந்த GUDDI என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசையில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.

கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பாடியிருக்கிறார். எந்த மொழியில் பாடினாலும் அவரது உச்சரிப்பு துல்லியமாக இருக்கும். “எல்லா பாஷைகளிலும் அவற்றினுடைய த்வனி தவறாமல் உச்சரிக்கும் வல்லமை பெற்ற வாணி ஒரு ஆயுட்கால பாடகியே” என்று கவியரசு கண்ணதாசனால் பாராட்டப்பட்டவர்.

இன்று ரசிகர்களால் ‘வாணி அம்மா’ என்று அழைக்கப்படும் அவரது திரையிசைப் பயணம் பல சாதனைகளை உள்ளடக்கியது. மதங்களைக் கடந்து பக்திப் பாடல்களும், தனி ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார்.

இவ்வளவு பெருமைகளை தன்னகத்தே கொண்ட இந்த இசைக்குயில் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தனது இல்லத்தில் இன்று (பிப்; 4) காலமானார். அவருக்கு வயது 78. வாணி ஜெயராமின் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், இசையுலகத்தைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வாணி ஜெயராம் சூப்பர் ஹிட் பாடல்கள் இங்கே…

மல்லிகை என் மன்னன் மயங்கும்…

Malligai En Mannan | மல்லிகை என் மன்னன் | Vani Jairam, K.R.Vijaya Hit Song HD

‘ஏழு ஸ்வரங்களுக்குள்’

‘முத்தமிழில் பாடவந்தேன்’

‘மானஸ ஸஞ்சரரே’

‘ஆலோகயே ஸ்ரீ பாலகிருஷ்ணம்’

‘மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்’

‘கண்ணாடி அம்மா உன் இதயம்’

‘நினைவாலே சிலை செய்து’

‘என் உள்ளம் அழகான வெள்ளித்திரை’

‘தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு’

‘ஆலமரத்துக் கிளி’

‘என்னுள்ளே ஏதோ’

‘நானே நானா’

‘கட்டிக் கரும்பே கண்ணா’

 ‘ஒரே நாள் உனை நான்’

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vani jayaram super hit songs collections tamil songs