கடைசிவரை கூட வரது என் ஜாதகத்திலேயே இல்லை: வனிதா விஜயகுமார்

கடைசி வரை என் கூட வரது என்பது என் ஜாதகத்திலேயே இல்லை, இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கடைசி வரை என் கூட வாங்க என்று வனிதா கூறியுள்ளார்.

vanitha vijaykumar, vanitha talks in bb jodigal, vanitha talks about relationship never life long coming, வனிதா, வனிதா விஜயகுமார், பிபி ஜோடிகள், கடைசி வரை என் கூட வரது என்பது என் ஜாதகத்திலேயே இல்லை, விஜய் டிவி, பிக் பாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, suresh chakravarthy, bigg boss, tamil news, vanitha news, vanitha, bb jodigal, bigg boss

வனிதா விஜயகுமார் என்றாலே ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களின் அகராதியில் வைரல் என்றுதான் அர்த்தம். அந்த அளவுக்கு வனிதா விஜயகுமார் பற்றி எந்த தகவலாக இருந்தாலும் சமூக ஊடகங்களில் உடனடியாக வைரலாகி விடும். இதற்கு காரணம், வனிதாவின் தைரியமான கேரக்டரும் சர்ச்சை நடவடிக்கைகளுமே முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

தமிழ் சினிமா துறையில் திரையிலும் நிஜ வாழ்விலும் தம்பதிகளாக இருந்த விஜயகுமார் – மஞ்சுளா தம்பதிகளின் மூத்த மகள்தான் வனிதா விஜயகுமார். நடிகர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக வனிதா அறிமுகமானார். சில படங்களில் ஹீரோயினாக நடித்த வனிதாவுக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் வராததால் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவருடைய திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமையவில்லை. அவருடைய 2 திருமணங்களும் மணமுறிவில் தான் முடிந்தது. வனிதாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒற்றைத் தாயாக அவர்களை வளர்த்து வருகிறார். இதையடுத்து, வனிதா நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் காதலில் இருந்து வந்தார். இந்த காதலும் கருத்து வேறுபாடால் முறிந்தது.

சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த வனிதாவுக்கு விஜய் டிவிதான் மீண்டும் தளத்தை அமைத்துக் கொடுத்தது. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது தைரியமான அதிரடியான கேரக்டரால் ரசிகர்களையும் விமர்சனங்களையும் சேர்ந்தே பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, குக் வித் கோமாளி சீசன் 1, உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இதனிடையே, கடந்த ஆண்டு வனிதா திரைப்பட தொழில்நுட்ப கலைஞர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்பதால் சர்ச்சையானது. இந்த திருமணமும் முறிந்துபோனது. இப்படி வனிதாவின் திருமணம் எல்லாமே விவாகரத்தில் முடிந்ததால் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் சர்ச்சையாக்கினார்கள்.

இந்த சூழலில்தான், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் ( பிக் பாஸ் ஜோடிகள்) நிகழ்ச்சியில் வனிதா பங்கேற்று இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் வனிதாவுக்கு ஜோடியாக பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர் சுரேஷ் சக்ரவர்த்தி இணைந்துள்ளார்.

விஜய் டிவியில் நேற்று (ஜூன் 20) ஒளிபரப்பான பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வனிதா தான் சுரேஷ் சக்கரவர்த்தியை மிகவும் சமரசம் செய்து அழைத்து வந்ததாகம் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கடைசி வரை என் கூட வரது என்பது என் ஜாதகத்திலேயே இல்லை, இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கடைசி வரை என் கூட வாங்க என்று கூறினார்.

வனிதா, தனது தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிப்பிடும் விதமாக சுய எள்ளல் உடன் கடைசி வரை என் கூட வரது என்பது என் ஜாதகத்திலேயே இல்லை, இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கடைசி வரை என் கூட வாங்க என்று கூறியது ரசிகர்கள் இடையே ஆரவாரத்தை ஏற்படுத்தியது.

மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை என்பதைப் போல, வனிதா சும்மா இருந்தாலும் வதந்தியைக் கிளப்புபவர்கள் சும்மா இருப்பதில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வனிதா வட இந்தியர் ஒருவருடன் 4வது முறையாக திருமணம் செய்துகொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது. அதோடு, அந்த நபர் ஒரு பைலட் என்றும் அவர் 3 மாதத்திற்கு ஒரு முறை வனிதாவை வந்து சந்தித்து வருகிறார் என்றும் பேசப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த வனிதா, என்னைப் பற்றி சினிமா ஒரு ஊடகத்தில் வெளியான செய்தி முழுக்க முழுக்க பொய்யானது. அது போல ஒரு சம்பவமே நடக்கவில்லை. அப்படியான ஒரு நபர் எனக்கு யார் என்றே தெரியாது என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vanitha vijaykumar talks in bb jodigal about relationship never life long coming

Next Story
ஃபேமிலியா இருக்கும்போதுதான் அதிக அழகு: பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா அப்டேட்baakiyalakshmi serial Tamil News: baakiyalakshmi serial actress jennifer and her husband photo goes viral
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com