Advertisment

வாரிசு டிக்கெட் சர்ச்சை: விஜய் மன்ற தலைவர் காரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்

வாரிசு படத்தின் சிறப்புக் காட்சி பெறுவதில் ஏற்பட்ட தகராறில் ராமநாதபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவரின் கார் அடித்து நொறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Madras HC relief to actor Vijay in Tax evasion case

நடிகர் விஜய்

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. வரும் 11-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. பிரகாஷ் ராஜ், சரத் குமார், ராஷ்மிகா மந்தனா, சங்கீதா, பிரபு, ஷியாம், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் குடும்ப திரைப்படமாக இருக்கும் என்பதால் ரசிகர்கள், மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

வாரிசு படத்தின் 3 பாடல்களும் படம் வெளியாவதற்கு முன்பே ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் படத்திற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. ராமநாதபுரத்தில் 2 திரையரங்குகளில் வாரிசு வெளியாகிறது. சிறப்பு காட்சி டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இரண்டு தியேட்டர்களிலும் முதல் 3 காட்சிகள் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரசிகர் மன்றத்திற்கான சிறப்பு காட்சி டிக்கெட்டை ராமநாதபுரம் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஜெயபாலன் வழங்கி வருகிறார்.

இந்நிலையில், சிறப்புக் காட்சி பெறுவதில் விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் தற்போதை நிர்வாகிகளுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில், ராமநாதபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவரின் கார் அடித்து நொறுக்கப்பட்டது. மேலும் மாஸ்க் அணிந்து 8 மர்மநபர்கள் தலைவரின் குடும்பத்தினரையும் மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது. புகார் பேரில் ராமநாதபுரம் காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment